Friday, March 19, 2010

107. பனிபோல பெய்யும் பரிசுத்தரே

பனிபோல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே (2 )
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே (2 )

1.வெண்மையானவரே
மேகஸ்தம்பமே
ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி - 2
ஆனந்த தைலமே

2.யுத்தங்கள் செய்பவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த - 2
உள்ளங்கை மேகமே

3.வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக - 2
காப்பாற்றி வளர்ப்பவரே


Save Page As PDF

1 comment:

எட்வின் said...

அருமையான பாடல்களைத் தொகுத்திருக்கிறீர்கள். உங்களையும், குடும்பத்தையும், பணிகளையும் கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும்