Thursday, August 20, 2009

42. வாருமையா போதகரே

1.வாருமையா போதகரே, வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியினில் சிறியவராம் எங்களிடம்

2.ஒளி மங்கி இருளாச்சே உத்தமனே வாருமையா
களித்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய்

3.ஆதரையிலென் ஆறுதலே அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே

4.நாமிருப்போம் நடுவிலென்றீர் நாயனுன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய தற்பரனே நலம் தருவாய்

5.உந்தன் மனை திருச்சபையை வையமெங்கும் வளர்த்திடுவாய்
பந்த மற பரிகரித்தே பாக்கியமளித் தாண்டருள்வாய்

6.பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன் திவ்ய ஆவி தந்தருள்வாய் Save Page As PDF

Wednesday, August 12, 2009

41. ஜீவனுள்ள தேவனே வாரும்

1.ஜீவனுள்ள தேவனே வாரும்
ஜீவ பாதையிலே நடத்தும்
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றிலே
ஜீவன் பெற என்னை நடத்தும்

தேவனே நீர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர்
தேவனே நீர் நல்லவர் தேவனே நீர் வல்லவர்

2.பாவிகள் துரோகிகள் ஐயா
பாவ ஆதாம் மக்களே தூயா
பாதகர் எம் பாவம் போக்கவே
பாதகன் போல் தொங்கினீரல்லோ

3.ஐந்து கண்ட மக்களுக்காக
ஐந்து காயம் ஏற்ற நேசரே
நொந்துருகி வந்த மக்கள் மேல்
நேச ஆவி வீசச் செய்குவீர்

4.வாக்குத் தத்தம் செய்த கர்த்தரே
வாக்கு மாறா உண்மை நாதனே
வாக்கை நம்பி வந்து நிற்கிறோம்
வல்ல ஆவி மாரி ஊற்றுவீர்

5.நியாயத்தீர்ப்பின் நாள் நெருங்குதே
நேசர் வரக் காலமாகுதே
மாயலோகம் நம்பி மாண்டிடும்
மானிடரை மீட்க மாட்டீரோ Save Page As PDF

Tuesday, August 11, 2009

40. அருள் ஏராளமாய் பெய்யும்

1.அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே!
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்பிக்குமே

அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல
திரளாய் பெய்யட்டுமே

2.அருள் ஏராளமாய் பெய்யும்
மேகமந்தார முண்டாம்
காடான நிலத்திலேயும்
செழிப்பும் பூரிப்புமாம்

3.அருள் ஏராளமாய் பெய்யும்
இயேசு வந்தருளுமேன்!
இங்குள்ள கூட்டத்திலேயும்
கிரியை செய்தருளுமேன்

4.அருள் ஏராளமாய் பெய்யும்
பொழியும் இச்சணமே
அருளின் மாரியைத் தாரும்
ஜீவ தயாபரரே

Save Page As PDF

39. இயேசு எந்தன் சங்கீதமானவர்

இயேசு எந்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான இயேசுவை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்

1.துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே

2.இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம்

3.வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்
வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம் Save Page As PDF

38. இயேசுவை நாம் எங்கே காணலாம்

இயேசுவை நாம் எங்கே காணலாம்
அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்

பனி படர்ந்த மலையின் மேல் பார்க்க முடியுமா?
கனி நிறைந்த சோலையின் நடுவே காண முடியுமா?

1.ஓடுகின்ற அருவியெல்லாம் தேடி அலைந்தேனே
ஆடுகின்ற அலை கடலில் நாடி அயர்ந்தேனே
தேடுகின்ற என் எதிரே தெய்வத்தைக் காணேனே
பாடுபடும் ஏழை நான் அழுது வாடினேனே

2.வான மதில் பவனி வரும் கார்முகில் கூட்டங்களே
வந்தருளும் இயேசுவையே காட்டிட மாட்டீரோ
காலமெல்லாம் அவனியின் மேல் வீசிடும் காற்றே நீ
கர்த்தர் இயேசு வாழும் இடம் கூறிட மாட்டாயோ

3.கண்ணிரண்டும் புனலாக நெஞ்சம் அனலாக
மண்டியிட்டு வீழ்ந்தேன் நான் திருமறை முன்பாக
விண்ணரசர் அன்புடனே கண்விழிப்பாய் என்றார்
கண் விழித்தேன் என் முன்னே கர்த்தர் இயேசு நின்றார் Save Page As PDF

37. நம் தேவனைத் துதித்துப்பாடி

நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1.நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம் - களி கூர்

2.மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம் - களி கூர்

3.மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம் - களி கூர் Save Page As PDF

36. கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு அல்லேலுயா அல்லேலுயா

1.பாவத்தின் சுமையகற்றி - கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டி காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலுயா

2.நீதியின் பாதையிலே - அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலுயா

3.மறுமையின் வாழ்வினிலே - இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலுயா Save Page As PDF

Monday, August 3, 2009

35. எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் - தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே

1.பூமியில் வாழ்கின்ற யாவும்
அதின் மேலுள்ள ஆகாயமும்
வானதூதர் சேனைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே - எண்ணில்

2.சூரிய சந்திரரோடே
சகல நட்சத்திர கூட்டமும்
ஆகாயப் பறவைகள் யாவும்
தேவா உம்மைப் போற்றுதே - எண்ணில்

3.காட்டினில் வாழ்கின்ற யாவும்
கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
நாதா உம்மைப் போற்றுதே - எண்ணில்

4.பாவ மனுக்குலம் யாவும்
தேவா உம அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு
ஓயா துதி பாடுதே - எண்ணில் Save Page As PDF

34. போற்றித் துதிப்போம் எம் தேவ

1.போற்றித் துதிப்போம் எம் தேவ தேவனைப்
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் என்றும் பாடித் துதிப்போம்

இயேசு என்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே
என் நேசர் இயேசுவை நான்
என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன்

2.கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரம் கொண்டு மார்பில்
சேர்த்தணைத்த அன்பை என்றும் பாடுவேன்

3.யோர்தான் நதி போன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்க்கும் ஜெய தொனியோடே
பாதுகாத்த அன்பை என்றும் பாடுவேன்

4.தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்
தாழ்த்தி என்னை அவர் கையில் தந்து
ஜீவபாதை என்றும் ஓடுவேன்

5.பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் இன்று
தந்து தொண்டு செய்குவேன் Save Page As PDF

33. கிறிஸ்துவின் அடைக்கலத்தில்

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்

1.கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில்
மந்தைகள் நடுவினில்
நெருங்கவும் முடியாது

2.இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும்

3.தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை

4.பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரை படமாயுள்ள
யாரையும் அணுகாது Save Page As PDF

32. என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது எது?

1.என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா

2.தம் பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தை பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே

3.என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா

4.என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பராய் ஆகியதால்
என்னுள்ளமே ஆஹா என் தேவனே ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுவேன்

5.என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள
என்னை என்றும் போதித்து நடத்துகின்றார்
என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள
என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்

6.விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய்
என்னையவர் ஆயத்தமாக்கினார்
என்னானந்தம் ஆஹா என்னானந்தம்
எனக்கென்றும் பேரானந்தமே Save Page As PDF

Saturday, August 1, 2009

31. மாறிடா எம்மா நேசரே

மாறிடா எம்மா நேசரே- ஆ
மாறாதவர் அந்பெந்நாளுமே
கல்வாரிச் சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே - ஆ

ஆ! இயேசுவின் மகா அன்பிதே
அதன் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே


1.பாவியாக இருக்கையிலே - அன்பால்

பாரில் உன்னைத் தேடி வந்தாரே

நீசன் என்றுன்னைத் தள்ளாமலே

நேசனாக மாற்றிடவே


2.உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்

உள்ளம் போல் நேசித்ததினால்

அல்லல் யாவும் அகற்றிடவே

ஆதி தேவன் பலியானாரே


3.ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய

தேவனின் விண் சாயல் அணிய

ஆவியாலே அன்பைச் சொரிந்தார்

ஆவலாய் அவரைச் சந்திக்க


4.நியாய விதி தினமதிலே - நீயும்

நிலையாகும் தைரியம் பெறவே

பூரணமாய் அன்பு பெருக

புண்ணியரின் அன்பு வல்லதே


5.பயமதை நீக்கிடுமே - யாவும்

பாரினிலே சகித்திடுமே

அது விசுவாசம் நாடிடுமே

அன்பு ஒருக்காலும் ஒழியாதே

Save Page As PDF