Sunday, February 14, 2010

90. பாதம் ஒன்றே வேண்டும்

பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்

1.நாதனே துங்க மெய் - வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ் செய்ய - பாதம்

2.சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த உன் - பாதம்

3.வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த பொற் - பாதம்

4.போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த நற் - பாதம்

5.நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த உன் - பாதம்

6.பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு - நாதனே என்றும் உன் - பாதம்

Save Page As PDF

Saturday, February 13, 2010

89. சபையின் அஸ்திபாரம்

1.சபையின் அஸ்திபாரம்
நல் மீட்பர் கிறிஸ்துவே
சபையின் ஜன்மாதாரம்
அவரின் வார்த்தையே
தம் மணவாட்டியாக
வந்ததைத் தேடினார்
தமக்குச் சொந்தமாக
மரித்ததைக் கொண்டார்

2.எத்தேசத்தார் சேர்ந்தாலும்
சபை ஒன்றே ஒன்றாம்;
ஒரே விசுவாசத்தாலும்
ஒரே ரட்சிப்புண்டாம்
ஒரே தெய்வீக நாமம்
சபையை இணைக்கும்
ஓர் திவ்விய ஞானாகாரம்
பக்தரைப் போஷிக்கும்

3.புறத்தியார் விரோதம்
பயத்தை உறுத்தும்;
உள்ளானவரின் துரோகம்
கிலேசப்படுத்தும்
பக்தர் ஓயாத சத்தம்
எம்மட்டும் என்பதாம்
ராவில் நிலைத்த துக்கம்
காலையில் களிப்பாம்

4.மேலான வான காட்சி
கண்டாசீர் வாதத்தை
பெற்று போர் ஓய்ந்து வெற்றி
சிறந்து மாட்சிமை
அடையும் பரியந்தம்
இன்னா உழைப்பிலும்
நீங்காத சமாதானம்
மெய்ச் சபை வாஞ்சிக்கும்

5.என்றாலும் கர்த்தாவோடு
சபைக்கு ஐக்கியமும்
இளைப்பாறுவோரோடு
இன்ப இணக்கமும்
இப்பாக்கிய தூயோரோடு
கர்த்தாவே, நாங்களும்
விண் லோகத்தில் உம்மோடு
தங்கக் கடாட்சியும்.
Save Page As PDF

Friday, February 5, 2010

88.உருகாயோ நெஞ்சமே நீ

1.உருகாயோ நெஞ்சமே நீ

குருசினில் அந்தோ பார்!

கரங் கால்கள் ஆணி யேறித்

திரு மேனி நையுதே!


2.மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவனாம்
இந்நிலமெல் லாம் புரக்க
ஈனக் குரு சேறினார்.


3.தாக மிஞ்சி நாவறண்டு
தங்க மேனி மங்குதே
ஏக பரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார்.


4.மூவுலகைத் தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்த போது
சிலுவையில் தொங்கினார்.


5.வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம் பாக்கினார் அன்றோ?

Save Page As PDF

87.என் அருள் நாதா, இயேசுவே

1.என் அருள் நாதா, இயேசுவே!

சிலுவை காட்சி பார்க்கையில்,

பூலோக மேன்மை நஷ்டமே

என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில்


2.என் மீட்பர் சிலுவை அல்லால்

வேறெதை நான் பாராட்டுவேன்?

சிற்றின்பம் யாவும் அதினால்

தகாததென்று தள்ளுவேன்


3.கை தலை காலிலும் இதோ!

பேரன்பும் துன்பும் கலந்தே

பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ?

முள் முடியும் ஒப்பற்றதே.


4.சராசரங்கள் அனைத்தும்

அவ்வன்புக்கு எம்மாத்திரம்;

என் ஜீவன் சுகம் செல்வமும்

என் நேசருக்குப் பாத்தியம்.


5.மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே,
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே.

Save Page As PDF