Thursday, March 25, 2010

116. பாரீர் கெத்சமனே பூங்காவிலென்

பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே

1.தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே - பாரீர்

2.அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர்

3.இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்

4.மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர்

5.அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் - பாரீர்

6.என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர்


Save Page As PDF

No comments: