Wednesday, March 31, 2010

128. நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - நீயும் சேவிப்பாயா?

1.கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

2.அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?

3.நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?

4.நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?

Save Page As PDF

127. கிருபையிதே தேவ கிருபையிதே

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப் பாதையிலே - இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே - கிருபை

2.வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை - கிருபை

3.அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் - கிருபை

4.நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் - கிருபை

5.ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் - கிருபை

Save Page As PDF

126. வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே

1.வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே
தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
சுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே

வல்லமை தாரும் வரங்கள் தாரும்
தாகம் தீர்த்து அபிஷேகியும்

2.சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
கேள்விப்பட்ட யாவையும் சொல்பவரே
கீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமை
சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே

3.காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே

4.சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
வரங்களால் பெற்றிட அருள் தாருமே


Save Page As PDF

125. பூரண ஆசீர் பொழிந்திடுமே

1.பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

2.ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே

3.தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா

4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்

5.குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே

6.மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே

Save Page As PDF

Tuesday, March 30, 2010

124. ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே

ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

1.வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

2.உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

3.சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

4.பலவித சோதனையை
சந்தோஷமாய் நினைப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

5.இயேசுவின் நாமத்திலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Save Page As PDF

123. எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க

எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

1.சென்ற காலம் முழுவதும் காத்தார் ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுகபெலன் அளித்தாரே - அல்லேலூயா

2.சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கித் திரும்பவும் என் மேல்
கிருபையும் பொழிந்தாரே - அல்லேலூயா

3.பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே - அல்லேலூயா

4.களிப்போடு விரைந்தெமைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் - அல்லேலூயா


Save Page As PDF

Monday, March 29, 2010

122. தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்

இயேசுவே உம் திவ்ய நாமத்திலே
இன்பமுடன் கூடி வந்தோமே

1.வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண் பாருமே - தேவா

2.சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம் - தேவா

3.கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம் - தேவா

4.கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே - தேவா

5.நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளன் நீர் வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே - தேவா

6.எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே - தேவா


Save Page As PDF

121. என் ஆத்தும நேச மேய்ப்பரே

என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் பேசும் ஜெபம் செய்யும் போது
ஆண்டவா பிரியமானதை
இப்போ காட்டும் செய்ய ஆயத்தம்

1.மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்
ஆத்துமத்தைத் தேற்றும் இடம்
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் - பேசும்

2.பாவிகட்கு உமது அன்பை
என் நடையாற் காட்டச்செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும் - பேசும்

3.என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும் - பேசும்



Save Page As PDF

120. மேகமே மகிமையின் மேகமே

மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

1.ஏகமாய் துதிக்கும்போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே

2.வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும்

3.மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே

4.வாழ்க்கைப் பயணத்திலே
முன்சென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே

5.கையளவு மேகம்தான்
பெருமழை பொழிந்தது
என் தேச எல்லையெங்கும்
பெருமழை (அருள்மழை) வேண்டுமே


Save Page As PDF

119. லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

லேசான காரியம் எதுவும் லேசான காரியம்
பெலமுள்ளவன் பெலனற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

1.மண்ணை பிசைந்து மனிதனை படைத்தது லேசான காரியம்
மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவதும்
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

2.கூழங்கல்லாலே கோலியாத் விழுந்தது லேசான காரியம்
ஆழ்கடல் மீனில் வரிப்பணம் பெறுவதும்
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்

3.கற்பாறை போலே கடல் மேல் நடப்பது லேசான காரியம்
கற்சாடி நீரை கனிரசம் ஆக்குதல்
லேசான காரியம் உமக்கது லேசான காரியம்


Save Page As PDF

118. உள்ளமெல்லாம் உருகுதையோ

1.உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மையல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொல்லடங்கா நேசத்தாலே
சொந்தமாக்கிக் கொண்டீரே

2.எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்டீர் என் ஏசையா
எத்தனையாம் துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் உம்மையே சேவிப்பேன்

3.மேக மீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாள் என்றோ
லோகமீதில் காத்திருப்போர்
ஏக்கமெல்லாம் தீர்ந்திட
தியாக ராஜன் இயேசுவை நான்
முகமுகமாய் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாள் எப்போ


Save Page As PDF

Thursday, March 25, 2010

117. கல்வாரி அன்பை எண்ணிடும்

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே

1.கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எங்கள் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே - கல்வாரி

2.சிலுவையில் மாட்டி வதைத்தனரோ
உம்மை செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டினீரோ
அன்போடு அவர்களை கண்டீரன்றோ
அப்பா உம் அன்பு பெரிதே - கல்வாரி

3.எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களை தரை மட்டும் தாழ்த்துகிறோம்
தந்து விட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும் - கல்வாரி


Save Page As PDF

116. பாரீர் கெத்சமனே பூங்காவிலென்

பாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே
பாவியெனக்காய் வேண்டுதல்
செய்திடும் சத்தம் தொனித்திடுதே

1.தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே - பாரீர்

2.அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்
எப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே - பாரீர்

3.இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்

4.மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்
முன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே - பாரீர்

5.அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்
துன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் - பாரீர்

6.என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை
எண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் - பாரீர்


Save Page As PDF

Tuesday, March 23, 2010

115. யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

1.வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே - யூத

2.வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே - யூத

3.மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன - யூத

4.எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே - யூத

5.மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

6.உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை

7.பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார்

8.கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம்
Save Page As PDF

114. உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே

1.கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே

2.மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே

3.எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே

4.மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்

5.ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

6.பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே









Save Page As PDF

Monday, March 22, 2010

113. கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் - கைகொட்டிப் பாடிடுவோம்

இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ ஆ கீதம்

1.பார் அதோ கல்லறை மீடின பெருங்கல்
புரண்டுருண்டோடுதுபார் - அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ - தேவ
புத்திரர் சந்நிதி முன் - ஆ ஆ கீதம்

2.வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் - தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு - ஆ ஆ கீதம்

3.அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் - இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்

4.வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெயவீரன் - நம்
மேள வாத்தியம் கை மணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம்


Save Page As PDF

112. அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
சிறுமை அடைந்தே தொங்குகிறார்

1.மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
மாய லோகத்தோடழியாது யான்
தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே - அந்தோ

2.அழகுமில்லை சௌந்தரியமில்லை
அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
பல நிந்தைகள் சுமந்தாலுமே
பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே - அந்தோ

3.அதிசயம் இது இயேசுவின் தியாகம்
அதிலும் இன்பம் அன்பரின் ஸ்நேகம்
அதை எண்ணியே நிதம் வாழுவேன்
அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே - அந்தோ

4.சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் - அந்தோ


Save Page As PDF

111. கர்த்தர் துயர் தொனியாய்

கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்தில்
இதயம் நொறுங்கி ஜெபித்தார்

1.மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தோன்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் - கர்த்தர்

2.துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந்தனிமையிலே - கர்த்தர்

3.பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் - கர்த்தர்

4.திறந்த கெத்சமெனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவோ - கர்த்தர்

5.பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் அழைக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியுடன் ஜெபிப்பேன் - கர்த்தர்

6.இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன் - கர்த்தர்


Save Page As PDF

110. ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து

ஏறுகின்றார் தள்ளாடித் தவழ்ந்து களைப்போடே
என் இயேசு குருசை சுமந்தே
என் நேசர் கொல்கொதா மலையின்மேல்
நடந்தே ஏறுகின்றார்

1.கன்னத்தில் அவன் ஓங்கி அடிக்கச்
சின்னப் பிள்ளைபோல் ஏங்கி நின்றார்
அந்தப் பிலாத்தும் கையைக் கழுவி
ஆண்டவரை அனுப்புகின்றான் - ஏறு

2.மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே
நெஞ்சைப் பிளந்தான் ஆ! கொடுமை
இரத்தமும் நீரும் ஓடி வருதே
இரட்சகரை நோக்கியே பார் - ஏறு

3.இந்தப்பாடுகள் உந்தன் வாழ்வுக்காய்ச்
சொந்தப்படுத்தி ஏற்றுக்கொண்டார்
நேசிக்கின்றாயோ இயேசு நாதரை
நேசித்து வா குருசெடுத்தே - ஏறு

4.சேவல் கூவிடும் மூன்று வேளையும்
சொந்த குருவை மறுதலித்தான்
ஓடி ஒளியும் பேதுருவையும்
தேடி அன்பாய் நோக்குகின்றார் - ஏறு

5.பின்னே நடந்த அன்பின் சீஷன்போல்
பின்பற்றி வா சிலுவை வரை
காடியைப் போல் கசந்திருக்கும்
கஷ்டங்களை அவரிடம் சொல் - ஏறு

6.செட்டைகளின் கீழ் சேர்த்தனைத்திடும்
சொந்தத் தாயின் அன்பிதுவே
எருசலமே! எருசலமே!
என்றழுதார் கண் கலங்க - ஏறு
Save Page As PDF

Sunday, March 21, 2010

109. பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்

பாவிக்கு புகலிடம் இயேசு இரட்சகர்
பாரினில் பலியாக மாண்டாரே

பரிசுத்தரே பாவமானாரே
பாரமான சிலுவை சுமந்தவரே

1.காட்டிக் கொடுத்தான் முப்பது வெள்ளிக்
காசுக்காகவே கர்த்தன் இயேசுவை
கொலை செய்யவே கொண்டு போனாரே
கொல்கொதா மலைக்கு இயேசுவை - பாவி

2.கள்ளர் மத்தியில் ஒரு கள்ளன் போல்
குற்றமற்ற கிறிஸ்தேசு தொங்கினார்
பரிகாசமும் பசிதாகமும்
படுகாயமும் அடைந்தாரே - பாவி

3.கால்கள் கைகளில் ஆணி பாய்ந்திட
கிரீடம் முட்களில் பின்னி சூடிட
இரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொங்கினார்
இதைக்காணும் உள்ளம் தாங்குமோ - பாவி

4.உலகத்தின் ரட்சகர் இயேசுவே
உயிர் கொடுத்தார் உயிர்த்தெழுந்தார்
தம்மை நம்பினால் உம்மைக் கைவிடார்
தளராமல் நம்பி ஓடி வா - பாவி


Save Page As PDF

Friday, March 19, 2010

108. தேவ தேவனைத் துதித்திடுவோம்

1.தேவ தேவனைத் துதித்திடுவோம்
சபையில் தேவன் எழுந்தருள
ஒருமனதோடு அவர் நாமத்தை
துதிகள் செலுத்தி போற்றிடுவோம்

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே
அல்லேலூயா பரிசுத்தர்க்கே
அல்லேலூயா இராஜனுக்கே

2.எங்கள் காலடி வழுவிடாமல்
எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்
கண்மணி போலக் காத்தருளும்
கிருபையால் நிதம் வழி நடத்தும் - அல்லேலூயா

3.சபையில் உம்மை அழைத்திடுவோம்
சகாயம் பெற்று வாழ்ந்திடுவோம்
சாத்தானை என்றும் ஜெயித்திடுவோம்
சாகும் வரையில் உழைத்திடுவோம் - அல்லேலூயா

4.ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை கிருபை தொடர்ந்திடவே
வேத வசனம் கீழ்ப்படிவோம்
தேவ சாயலாய் மாறிடுவோம் - அல்லேலூயா

5.வானத்தில் அடையாளம் தோன்றிடுமே
இயேசு மேகத்தில் வந்திடுவார்
நாமும் அவருடன் சேர்ந்திடவே
நம்மை ஆயத்தமாக்கிக் கொள்வோம் - அல்லேலூயா


Save Page As PDF

107. பனிபோல பெய்யும் பரிசுத்தரே

பனிபோல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே (2 )
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே (2 )

1.வெண்மையானவரே
மேகஸ்தம்பமே
ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி - 2
ஆனந்த தைலமே

2.யுத்தங்கள் செய்பவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த - 2
உள்ளங்கை மேகமே

3.வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக - 2
காப்பாற்றி வளர்ப்பவரே


Save Page As PDF

106. என் இன்ப துன்ப நேரம்

என் இன்ப துன்ப நேரம்
நான் உம்மைச் சேருவேன்
நான் நம்பிடுவேன்
பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்

1.நான் நம்பிடும் தெய்வம் - இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் - என்

2.இவரே நல்ல நேசர் - என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் - என்

3.பார்போற்றும் ராஜன் - புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் - என்

Save Page As PDF

105. உம்மை ஆராதிக்கின்றோம்

உம்மை ஆராதிக்கின்றோம் - இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா - அல்லேலூயா(2 )

1.பாவியான என்னையும் - உம்
பிள்ளையாய் மாற்றினீர்

2.என்னை அழைத்தவரே - நீர்
உண்மையுள்ளவரே

3.உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

4.என்னை முன் குறித்தீரே - நீர்
கைவிடவே மாட்டீர்

5.என்னை மறுரூபமாக்கிடும் - உந்தன்
மகிமையில் சேர்த்திடும்


Save Page As PDF

Tuesday, March 16, 2010

104. உங்க கிருபை தான் என்னைத்

உங்க கிருபை தான்
என்னைத் தாங்குகின்றது
உங்க கிருபை தான்
என்னை நடத்துகின்றது

கிருபையே கிருபையே
மாறாத நல்ல கிருபையே

1.உடைக்கப்பட்ட நேரத்தில் எல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது

2.சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்து கொண்ட கிருபை இது

3.ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது

4.ஊழியத்தின் பாதையில் எல்லாம்
என்னை உயர்த்தி வைத்தக் கிருபை இது

Save Page As PDF

103. எந்தன் கன்மலையானவரே

1.எந்தன் கன்மலையானவரே
என்னைக் காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்குப் பாத்திரரே

ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே

2.உந்தன் சிறகுகளின் நிழலில்
என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே

3.எந்தன் பெலவீன நேரங்களில்
உம் கிருபை தந்தீரையா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயமில்லையே

4.எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மைப் புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணியே துதித்திடுவேன்

Save Page As PDF

Monday, March 15, 2010

102. எலியாவின் தேவன் நம் தேவன்

1.எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன்
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்லபெரும் காரியம் செய்திடுவார்

கர்த்தரே தேவன் ( 2)
என்றே ஆர்ப்பரிப்போம்

2.வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

3.சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினார் தேவ மனிதன்
அக்கினியால் பதில் அளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன்

4.தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன்

5.வானங்களைத் திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன்
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்

Save Page As PDF

101. நம் தேவன் அன்புள்ளவர்

நம் தேவன் அன்புள்ளவர் நம் தேவன் பரிசுத்தர்
நம் தேவன் நீதிபரர் நமக்காக ஜீவன் தந்த இயேசு அவரே

1.நன்மை ஏதும் நம்மில் ஒன்றும் இல்லையே
என்ற போதும் நம்மை நேசித்தாரே
ஆ..அந்த அன்பில் மகிழ்வோம்
அன்பரின் பாதம் பணிவோம்

2.அத்திமரம் துளிர் விடாமல் போனாலும்
திராட்சைச் செடி கனி கொடாமற் போனாலும்
ஆ..அவர் காயம் நோக்குவோம்
அதுவே என்றும் போதுமே

3.வான மீதில் இயேசு இறங்கி வருவார்
தேவ தூதர் போல மகிமை அடைவோம்
ஆ ... எங்கள் தேவா வாருமே
அழைத்து வானில் செல்லுமே

4.அல்லேலூயா கீதம் நாம் என்றும் பாடுவோம்
ஆண்டவரோடென்றும் நாம் ஆளுகை செய்வோம்
ஆ..அந்த நாள் நெருங்குதே
நினைத்தால் நெஞ்சம் பொங்குதே



Save Page As PDF

100. யெகோவா நிசி யெகோவா நிசி

யெகோவா நிசி ( 4)
யெகோவா நிசியை ஏற்றிப் பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக் கொடியே அல்லேலூயா (2)

1.கர்த்தர் துணை நின்று யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளை தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்திய ஆவி நிற்கிறார்
கர்த்தர் நல்ல யுத்த வீரரே - நம்

2.நமக்கிருக்கும் இந்த பெலன் போதுமே
நாதன் இயேசு அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபெலமோ தேவையா
பரம தேவ ஆவி நம்மில் இல்லையா
ஜீவ தேவ சேனை அல்லவா - நம்

3.அல்லேலூயா தேவ நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசு ராஜா வருகவே
அல்லேலூயா ஆவி புகழ் ஓங்கவே
அல்லேலூயா தேவ படை வெல்கவே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே - என்றும்


Save Page As PDF

99. யெகோவாயீரே தந்தையாம்

1.யெகோவாயீரே தந்தையாம் இயேசுவே
நீர் மாத்திரம் போதும் எனக்கு
யெகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானேன்
யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
என் தேவையெல்லாம் சந்தீப்பீர்

நீர் மாத்திரம் போதும் ( 2)
நீர் மாத்திரம் போதும் எனக்கு

2.யெகோவா ஏலோஹீம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தினில்

3.இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என் மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்




Save Page As PDF

Friday, March 12, 2010

98. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார்

1.இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்
இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,

மகிழ் கொண்டாடுவோம்,
மகிழ் கொண்டாடுவோம்

2.போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,
புகழார்ந் தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க - மகிழ்

3.அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட,
அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட - மகிழ்

4.பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன்,
பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன்; - மகிழ்

5.இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம்;
எல்லோருமே களி கூர்ந்தினி துடன் சேர்ந்து பாடுவோம் - மகிழ்

Save Page As PDF

97. எழுந்தார் இறைவன்

எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே
எழுந்தார் இறைவன்

1.விழுந்தவரைக் கரையேற்றப் - பாவத்
தழுந்து மனுக்குலத்தை மாற்ற, - விண்ணுக்
கெழுந்து நாம் அவரையே போற்ற - எழுந்தார்

2.செத்தவர் மீண்டுமே பிழைக்க, - உயர்
நித்திய ஜீவனை அளிக்கத் - தேவ
பக்தர் யாவரும் களிக்க - எழுந்தார்

3.கருதிய காரியம் வாய்க்கத் - தேவ
சுருதி மொழிகளெல்லாம் காக்க, - நம்
இரு திறத்தாரையும் சேர்க்க - எழுந்தார்

4.சாவின் பயங்கரத்தை ஒழிக்கக், - கெட்ட
ஆவியின் வல்லமையை அழிக்க, - இப்
பூவின் மீதுசபை செழிக்க - எழுந்தார்

5.ஏதுந் தீவினை செய்யாத் தூயன், - எப்
போதுமே நன்மைபுரி நேயன் - தப்
பாது காத்திடும் நல்லாயன் - எழுந்தார்
Save Page As PDF

Thursday, March 11, 2010

96. ஆமென், அல்லேலூயா! மகத்துவ

ஆமென், அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென், அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே, உன்னதமே! - ஆமென்

1.வெற்றிகொண்டார்ப் பரித்து - கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து - முறித்து;
பத்ராசனக் கிறிஸ்து - மரித்து
பாடுபட்டுத்தரித்து, முடித்தார் - ஆமென்

2.சாவின் கூர் ஒடிந்து - மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து - விழுந்து
ஜீவனே விடிந்து - தேவாலயத்
திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது - ஆமென்

3.வேதம் நிறைவேற்றி - மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி - பொய் மாற்றி,
பாவிகளைத் தேற்றி, - கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் - ஆமென்



Save Page As PDF

Wednesday, March 3, 2010

95. ராச ராச பிதா மைந்த

ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக - ராச

1.மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை - ராச

2.ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித - ராச

3.மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ - ராச

4.வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே
நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர - ராச

Save Page As PDF

94. இயேசுவின் நாமமே திருநாமம்

இயேசுவின் நாமமே திருநாமம், - முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்

1.காசினியில் அதனுக் கிணையில்லையே; - விசு
வாசித்த வர்களுக்குக் குறையில்லையே - இயேசுவின்

2.இத்தரையில் மெத்தவதி சயநாமம்; - அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் - இயேசுவின்

3.உத்தம மகிமைப் பிரசித்த நாமம்; - இது
சத்திய விதேய மனமொத்த நாமம் - இயேசுவின்

4.விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்;- கடி
கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம் - இயேசுவின்

5.பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி - பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி - இயேசுவின்

Save Page As PDF

93. குருசினில் தொங்கியே

குருசினில் தொங்கியே, குருதியும் வடிய,
கொல்கதா மலைதனிலே - நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி
கொள்ளாய் கண் கொண்டு.

1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ! - தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
சேனைத்திரள் சூழ - குருசினில்

2.பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க - யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை - குருசினில்

3.சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ! - தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ? - குருசினில்

4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே - அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது! பார்; - குருசினில்

5.எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? - நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ? - குருசினில்
Save Page As PDF

92. ஓசன்னா பாடுவோம்

ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

1.முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
அன்று போல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம்.

2.சின்ன மறி மீதில் ஏறி அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார் .

3.பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.

4.பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்
ஜாலர் வீணையோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம்.

5.குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்று நாமும் திரியேகரைப் போற்றுவோம்.

Save Page As PDF

91. பவனி செல்கின்றார் ராசா

பவனி செல்கின்றார் ராசா - நாம்
பாடிப் புகழ்வோம் நேசா.

அவனிதனிலே மறிமேல் ஏறி
ஆனந்தம் பரமானந்தம்.

1.எருசலேமின் பதியே - சுரர்
கரிசனையுள்ள நிதியே!
அருகில் நின்ற அனைவர் போற்றும்
அரசே, எங்கள் சிரசே!

2.பன்னிரண்டு சீஷர் சென்று - நின்று
பாங்காய் வஸ்திரம் விரிக்க
நன்னயம்சேர் மனுவின் சேனை
நாதம் கீதம் ஓத.

3.குருத்தோலைகள் பிடிக்க - பாலர்
கும்புகும்பாகவே நடிக்க
பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
போற்ற மனம் தேற்ற.
Save Page As PDF