Friday, May 7, 2010

145. நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1.செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய்

2.உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க

3.ஜீவனைத் தியாகமாய் வைத்தப் பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்

4.மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்துருக்களாயினாரே
சத்தியத்தைச் சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம்

5.அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க் களிப்பீர்

6.சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் ராஜனையே

Save Page As PDF

No comments: