Wednesday, May 19, 2010

164. கலிலேயா கடற்கரையோரம்

கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2.நண்பர்கள் பகைத்தாலும் - இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் - அவர்
நமையினால் வழி நடத்திடுவார் - நெஞ்சமே

3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் - மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் - நெஞ்சமே
Save Page As PDF

163. கர்த்தரின் கை குறுகவில்லை

1.கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

2.திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் - விசுவாசியே

3.நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் - விசுவாசியே

4.மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் - விசுவாசியே
Save Page As PDF

162. அன்புள்ள இயேசையா

அன்புள்ள இயேசையா
உம பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

1.காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

2.பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

3.தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

Save Page As PDF

Tuesday, May 18, 2010

161. அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா! உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

1.பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில்; கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும்

2.நோயையும் ஏற்றவர் ; பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை; நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே; நேயமாய் அழைக்கிறார்

3.துன்பம் சகித்தவர்; துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே; துரிதமாய் நீ வாராயோ

4.அந்தக் கேடடைந்தார்; அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட ; இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும்; சந்திப்பார் நீ வாராயோ

5.கல்லறை திறக்க; காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே ; கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே

6.சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற் வாயனே, வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே; தந்துனை அழைக்கிறார்

Save Page As PDF

Monday, May 17, 2010

160. பயப்பட மாட்டேன் நான் பயப்பட

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்

1.உதவி செய்கிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

2.காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

3.பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

4.பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நான் தொடர்ந்து ஓடுவேன்

5.வலைகள் வீசுவோம் மீன்களை பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

6.உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Save Page As PDF

159. ஒரு தாய் தேற்றுவதுபோல்

ஒரு தாய் தேற்றுவதுபோல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா - (4)

1.மார்போடு அணைப்பாரே
மனக் கவலை தீர்ப்பாரே

2.கரம்பிடித்து நடத்துவார்
கன் மலைமேல் நிறுத்துவார்

3.எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே

4.ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
Save Page As PDF

158. என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சித்தவரும் அவரே
என் ஜீவனுக்கரணானவர் - நான்
யாருக்கும் அஞ்சமாட்டேன்

1.தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
தந்தை இயேசென்னை சேர்த்துக்கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார்

2.தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
தேவன் அருகில் வந்து என்னை காத்திடுவார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே

Save Page As PDF

157. ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - (2 )

எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் - ஊற்றப்பட

1.தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே - எண்ணெய்

2.ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் - எண்ணெய்

3.ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் - எண்ணெய்

4.ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் - எண்ணெய்

5.ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே - எண்ணெய்

Save Page As PDF

156. சந்தோசம் பொங்குதே

சந்தோசம் பொங்குதே (2)
சந்தோசம் என்னில் பொங்குதே - அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் பொங்கி பொங்குதே

1.வழி தப்பி நான் திரிந்தேன் பாவ பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக்குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம்நீங்கிற்றே

2.சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே

3.பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்

Save Page As PDF

Friday, May 14, 2010

155. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

1.இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2.நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்

3.விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்

4.இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே

5.ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே

6.அங்கே அனேக வாசஸ் தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே

Save Page As PDF

154. அப்பா உம் கிருபைகளால்

அப்பா உம் கிருபைகளால் - என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் - என்னை
அணைத்துக் கொண்டீரே

1.தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது - 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது - 2

2.வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை - 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை - 2

3.கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை - 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை - 2

Save Page As PDF

153. அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில்

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் ()

1.தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

2.குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

3.பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் - இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Save Page As PDF

152. சுத்தம் பண்ணப் படாத தேசமே

சுத்தம் பண்ணப் படாத தேசமே
சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
ஸ்திரப்படாத தேசமே ..
நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

1.பெலனான வயதுள்ள வாலிபரே
தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள் (2)
எதிர் காலம் கனவாக மறைவதற்குள்
சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள் (2)

2.தேசத்தை ஆளும் பிரபுக்களே
தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள் (2)
தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
ஏழைக்கு தானம் செய்திடுங்கள் (2)

3.வேதத்தை சுமக்கும் சீடர்களே
வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள் (2)
பாவத்தை சுமக்கும் பாரதத்தில்
தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள் (2)
Save Page As PDF

Sunday, May 9, 2010

151. விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது - (2)
அக்கரை நோக்கி - (2)

1.பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ

2.ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ

3.நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ

Save Page As PDF

150. வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே

வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!
வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே!

1.நோவா கால மக்களெல்லாம் புறக்கணித்தாரே
புரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரே
சோதோமைப்போல் கொமோராவைப்போல் பாவம் செய்யாதே
சுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே

2.ஏவாளைப்போல் இச்சையிலே வீழ்ந்துவிடாதே
ஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதே
தீனாளைப் போல் ஊரை சுற்ற ஆசைப்படாதே
தீட்டுப் பட்டு அழிந்திடுவாய் மறந்துவிடாதே
3.சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரளியாதே
சிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாதே
கடமையினை மறந்து விட்ட தாவீதை போல
கணப்பொழுதில் பாவத்திலே விழுந்துவிடாதே

4.பேதுருபோல் இயேசுவை நீ மறுதலிக்காதே
தோமாவைப் போல் அவிசுவாசம் அவர்மேல் கொள்ளாதே
கர்த்தரை நீ மறந்து விட்டு காலம் தள்ளாதே
புத்தியில்லா கண்ணிகைப்போல் கதவைத் தட்டாதே

5.வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைத்திடுவாயே
இல்லையென்றால் இரட்சிப்பின்றி அழிந்திடுவாயே
காலம் இது கடைசி காலம் உணர்ந்திடுவாயே
கர்த்தர் இயேசு வருமுன்னே திரும்பிடுவாயே

Save Page As PDF

149. வழி சொன்னவர் வழியுமானவர்

வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் - இவரே

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனவர் - இயேசு

1.இயேசுவே தெய்வம் - ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் - மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் - தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் - மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா - ராஜாதி ராஜா (2)

2.இயேசுவே இரட்சகர் - உயிர் தந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் - உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தனாம் - கர்த்தாதி கர்த்தனாம்
இயேசுவே ராஜனாம் - ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா - ராஜாதி ராஜா (2)
Save Page As PDF

Friday, May 7, 2010

148. சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் (2) - சந்தோஷ

1.நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும்
நம்மைக் காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க - சந்தோஷ

2.விசுவாச ஓட்டத்திலும் ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க - சந்தோஷ

3.துன்பங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க - சந்தோஷ

4.என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார் சந்தோஷமாயிருங்க - சந்தோஷ

Save Page As PDF

147. காணிக்கை தந்தோம் கர்த்தாவே

காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மை இப்போதே
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே

1.நாங்கள் தந்த காணிக்கை எல்லாம்
இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
ஆகாயம் மாறும் இறைவனின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது

2.ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
கண்ணீரைப்போல காணிக்கை இல்லை
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே

3.காணிக்கை தான் செலுத்த வந்தோம்
கருணை கிடைக்கட்டும்
தேவன் தந்த ஜீவன் எல்லாம்
புனிதம் அடையட்டும்
என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்
ஏனென்று கேளும் இறைவனின் மகனே
எம்மையே காணிக்கை தந்தோமே
Save Page As PDF

146. புதிய பாடல் பாடி பாடி

புதிய பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்
புகழ்ந்து பாடல் பாடி பாடி இயேசு
ராஜாவைக் கொண்டாடுவோம்

1.கழுவினார் இரத்தத்தாலே
சுகம் தந்தார் காயத்தாலே
தேற்றினார் வசனத்தாலே
திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு

2.உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
உம்மையே நம்பி உள்ளோம்
பூரண சமாதானம்
புவிதனில் தருபவரே - தினமும்

3.அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ள தேவா
வரங்களின் மன்னவனே - எல்லா

4.கூப்பிட்டேன் பதில் வந்தது
குறையெல்லாம் நிறைவானது
மகிமையின் ராஜா - அவர்
மகத்துவமானவரே - இயேசு

Save Page As PDF

145. நன்றியால் பாடிடுவோம்

நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1.செங்கடல் தனை நடுவாய்ப் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியதே இந்நாள் வரையும்
தயவாய் மாதயவாய்

2.உயிர்ப்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க

3.ஜீவனைத் தியாகமாய் வைத்தப் பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம்

4.மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்துருக்களாயினாரே
சத்தியத்தைச் சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம்

5.அழைக்கப்பட்டோரே நீர் உன்னத அழைப்பினை
அறிந்தே வந்திடுவீர்
அளவில்லா திரு ஆக்கமிதனை
அவனியோர்க் களிப்பீர்

6.சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய்
சீக்கிரம் வருவார்
சிந்தை வைப்போம் சந்திக்கவே
சீயோனின் ராஜனையே

Save Page As PDF

144. இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே(4)
துதிப்பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா (4)

1.சமாதானம் தந்தார் இயேசு ( 4)

2.புதுவாழ்வு தந்தார் இயேசு ( 4)

3.விடுதலை தந்தார் இயேசு ( 4)

4.புதுப் பாடல் தந்தார் இயேசு (4 )

5.அபிஷேகம் தந்தார் இயேசு (4 )

Save Page As PDF

143. இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2)

1.உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)

2.தனிமரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)

3.உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)


Save Page As PDF

142. எந்தன் அன்புள்ள ஆண்டவர்

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப்போல் ஒருதேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வமே நீர்

ஆ! ஆனந்தம், ஆனந்தமே!
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே!

1.பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே

2.பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே

3.உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர்

4.எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே

5.பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பணம் ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும் இயேசுவே
போதும் எனக்கு நீரே

Save Page As PDF

141. கலிலேயா என்ற ஊரில்

கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்

அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே

1.கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் - (3)
அல்லேலூயா ராஜனுக்கே

2.கரங்களை அசைத்துப் பாடிடுவோம் - (3)
அல்லேலூயா ராஜனுக்கே

3.கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் - (3)
அல்லேலூயா ராஜனுக்கே

Save Page As PDF

Thursday, May 6, 2010

140. சாலேமின் ராசா சங்கையின் ராசா

1.சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் - இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்

2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே - இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?

3.எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே

4.நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; - இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே

5.சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; - உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

Save Page As PDF

139. குயவனே குயவனே படைப்பின்

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

1.வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

2.விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே

3.மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே
காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே

Save Page As PDF

138. இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது

1.உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்
உனக்காகவே அடிகள் பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்

2.பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே
தயங்கிடாதே தாவி ஓடி வா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா

Save Page As PDF

137. அநாதி சிநேகத்தால் என்னை

அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால் என்னை இழுத்துக்கொண்டீரே

உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

1.அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து காத்து கொண்டீரே

2.தாயின் கருவில் தோன்று முன்னே தெரிந்து கொண்டீரே
தாயை போல ஆற்றி தேற்றி அரவணைத்தீரே

3.நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா

4.கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே

Save Page As PDF

Wednesday, May 5, 2010

136. வரவேணும் எனதரசே மனு

வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

1.வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா
தாதாவும் தாய் சகலமும் நீயே
நாதா, உன் தாபரம் நல்குவாயே - வரவே

2.படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் -வரவே

3.வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! - வரவே




Save Page As PDF

135. கல்வாரியே கல்வாரியே

கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே - என்

1.பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த - கல்வாரியே

2.பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத - கல்வாரியே

3.நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் - கல்வாரியே
4.முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் - கல்வாரியே

5.சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ - கல்வாரியே

6.எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா - கல்வாரியே

7.இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் - கல்வாரியே

Save Page As PDF