Saturday, October 17, 2009

62. பக்தரே, வாரும் ஆசை ஆவலோடும்

1.பக்தரே, வாரும்
ஆசை ஆவலோடும்;
நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!

சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.

2.தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்!

3.மேலோகத்தாரே
மா கேம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!

4.இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும். Save Page As PDF

No comments: