Friday, October 9, 2009

55. கண்மணி நீ கண்வளராய்

கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்

1.தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ

2.சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ

3.வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ Save Page As PDF

No comments: