அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே
எங்கள் அன்பின் பாலனே
எங்கள் தெய்வ பாலனே
1.வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த பாலனே
வான சாஸ்திரிகளும் கண்டு துதித்த பாலனே
ஆவலாய் ஆட்டிடையர்களும் பாடி
பணிந்த பாலனே
2.ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலனே
ஈனப் பேயை வெல்ல வந்த ஜெயபாலனே
ஈன சிலுவையில் மரித்துயிர்த்த
மகிமைப் பாலனே
3.தாழ்மை காட்ட முன்னணையில் பிறந்த பாலனே
தாழ்ந்தோரின் அடைக்கலமாய் வந்த பாலனே
தாகம் தீர்க்கும் ஜீவ நதியாய் வந்த
இயேசு பாலனே
Save Page As PDF
No comments:
Post a Comment