வாரும் நாம் எல்லாரும் கூடி,
மகிழ் கொண்டாடுவோம் - சற்றும்
மாசிலா நம் இயேசு நாதரை
வாழ்த்திப் பாடுவோம் ஆ!
1.தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் - இந்தத்
தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் - வாரும்
2.மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் - அங்கே
மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் - வாரும்
3.ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் - பாரும்
நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார் - வாரும்
4.மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே - இந்த
மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார் - வாரும்
5.பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே - அவர்
பட்சம் வைத்துறும் தொழும் பரை ரட்சை செய்கிறார் - வாரும்
Save Page As PDF
Wednesday, October 28, 2009
Monday, October 26, 2009
71. அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே
அன்புருவாய் வந்த எங்கள் ஏசுபாலனே
எங்கள் அன்பின் பாலனே
எங்கள் தெய்வ பாலனே
1.வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த பாலனே
வான சாஸ்திரிகளும் கண்டு துதித்த பாலனே
ஆவலாய் ஆட்டிடையர்களும் பாடி
பணிந்த பாலனே
2.ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலனே
ஈனப் பேயை வெல்ல வந்த ஜெயபாலனே
ஈன சிலுவையில் மரித்துயிர்த்த
மகிமைப் பாலனே
3.தாழ்மை காட்ட முன்னணையில் பிறந்த பாலனே
தாழ்ந்தோரின் அடைக்கலமாய் வந்த பாலனே
தாகம் தீர்க்கும் ஜீவ நதியாய் வந்த
இயேசு பாலனே Save Page As PDF
எங்கள் அன்பின் பாலனே
எங்கள் தெய்வ பாலனே
1.வானதூதர் மகிழ்ந்துபாட உதித்த பாலனே
வான சாஸ்திரிகளும் கண்டு துதித்த பாலனே
ஆவலாய் ஆட்டிடையர்களும் பாடி
பணிந்த பாலனே
2.ஈசாயின் அடிமரத்தில் துளிர்த்த பாலனே
ஈனப் பேயை வெல்ல வந்த ஜெயபாலனே
ஈன சிலுவையில் மரித்துயிர்த்த
மகிமைப் பாலனே
3.தாழ்மை காட்ட முன்னணையில் பிறந்த பாலனே
தாழ்ந்தோரின் அடைக்கலமாய் வந்த பாலனே
தாகம் தீர்க்கும் ஜீவ நதியாய் வந்த
இயேசு பாலனே Save Page As PDF
70. தேவக் குமாரன் இயேசு
தேவக் குமாரன் இயேசு
புவியில் வந்தார் மானிடனாய்
1.அதிசயமாம் அவர் நாமம்
ஆலோசனைக் கர்த்தாராமே
புல்லனையாம் முன்னணையில்
பிறந்திருக்கும் இப்பாலகனை - தேவ
2.ஆதரவற்றோரின் தஞ்சம்
ஆயல்களின் நேயராமே
வல்லமையுள்ள கர்த்தராமே
சமாதானப் பிரபுவும் இவரே - தேவ
3.இராஜாதி ராஜன் இவரே
கர்த்தாதி கர்த்தனும் இவரே
சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
வாரேன் என்றவரும் இவரே - தேவ Save Page As PDF
புவியில் வந்தார் மானிடனாய்
1.அதிசயமாம் அவர் நாமம்
ஆலோசனைக் கர்த்தாராமே
புல்லனையாம் முன்னணையில்
பிறந்திருக்கும் இப்பாலகனை - தேவ
2.ஆதரவற்றோரின் தஞ்சம்
ஆயல்களின் நேயராமே
வல்லமையுள்ள கர்த்தராமே
சமாதானப் பிரபுவும் இவரே - தேவ
3.இராஜாதி ராஜன் இவரே
கர்த்தாதி கர்த்தனும் இவரே
சாரோனின் ரோஜா புஷ்பம் இவர்
வாரேன் என்றவரும் இவரே - தேவ Save Page As PDF
69. மந்தை ஆயர் மனம் மகிழவே
1.மந்தை ஆயர் மனம் மகிழவே
மழலை உருவாய் வந்தவரே
மண்ணின் மாந்தரை மீட்பதற்காக
மாசற்ற ஜோதியாய் வந்தவரே
மரணத்தை ஜெயித்த மன்னவே
மனுவின் ஜோதியாய் வந்தீரே
வா வா என் நேசர்
வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்
நீ அன்பாய் -- (2)
2.வாக்குகட்கு பங்காளிகளாக்கி
நோக்கமாய் நம்மை ரட்சித்தாரே
ஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கி
நாடும் நம்மை தம் சரீரமாக்கி
சஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவே
சமாதான பிரபுவாய் உதித்தவரே
Save Page As PDF
மழலை உருவாய் வந்தவரே
மண்ணின் மாந்தரை மீட்பதற்காக
மாசற்ற ஜோதியாய் வந்தவரே
மரணத்தை ஜெயித்த மன்னவே
மனுவின் ஜோதியாய் வந்தீரே
வா வா என் நேசர்
வா இந்நேரம் வந்தாசீர் தந்தருள் அன்பாய்
நீ அன்பாய் -- (2)
2.வாக்குகட்கு பங்காளிகளாக்கி
நோக்கமாய் நம்மை ரட்சித்தாரே
ஏக்கங்கள் எல்லாம் அவர் நீக்கி
நாடும் நம்மை தம் சரீரமாக்கி
சஞ்சலம் தவிப்பையும் நீக்கிடவே
சமாதான பிரபுவாய் உதித்தவரே
Save Page As PDF
68. அதிகாலையில் பாலனை தேடி
அதிகாலையில் பாலனை தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
1.அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
வீண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க - அதிகாலையில்
2.மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் - அதிகாலையில் Save Page As PDF
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாட்டையும் குடில் நாடி
தேவ பாலனை பணிந்திட வாரீர்
வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்
1.அன்னைமா மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
வீண் தூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க - அதிகாலையில்
2.மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த மன்னவன் முன்னிலை நின்றே
தம் கந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியை கண்டிட வாரீர் - அதிகாலையில் Save Page As PDF
67. ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே - என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ!
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே - இதோ!
1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே - பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே - இதோ! - ஆத்துமா
2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் - நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் - தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் - இதோ! - ஆத்துமா
3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் - அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் - அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் - இதோ! - ஆத்துமா
Save Page As PDF
ஆவியும் அவரில் களிக்கின்றதே - இதோ!
நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே
எந்தன் பார்த்திபனுட பதந் தினம்பணிந்தே - இதோ!
1.அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே - என்னை
அனைவரும் பாக்கிய மென்பாரே
முடிவில்லா மகிமை செய்தாரே - பல
முடையவர் பரிசுத்தர் என்பாரே - இதோ! - ஆத்துமா
2.பயப்படும் பக்தருக் கிரங்குகிறார் - நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார்
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் - தன்னை
உகந்தவர் தாழ்த்திடில் உயர்த்துகின்றார் - இதோ! - ஆத்துமா
3.முற்பிதாக்களுக்கவர் சொன்னதுபோல் - அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால்
நட்புடன் நினை வொடு நல்லிஸரேல் - அவன்
நலம்பெற ஆதரித் தார்மறவேல் - இதோ! - ஆத்துமா
Save Page As PDF
Friday, October 23, 2009
66. ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார்
ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார் - ஆ!
1.அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சிதா - ரட்சகனாகிய
உச்சிதவரனே! - ஆ!
2.ஆதம் பவமற, நீதம் நிறைவேற - அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் - ஆ!
3.ஞானியர் தேட, வானவர் பாட - மிக
நன்னய, உன்னத - பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் - ஆ!
4.கோனவர் நாட, தானவர் கொண்டாட - என்று
கோத்திரர் தோத்திரஞ் - சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் - ஆ!
5.விண்ணுடு தோண, மன்னவர் பேண - ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் - ஆ!
Save Page As PDF
1.அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! - நவ
அச்சய சச்சிதா - ரட்சகனாகிய
உச்சிதவரனே! - ஆ!
2.ஆதம் பவமற, நீதம் நிறைவேற - அன்று
அல்லிராவினில் வெல்லையடியினில்
புல்லணையிற் பிறந்தார் - ஆ!
3.ஞானியர் தேட, வானவர் பாட - மிக
நன்னய, உன்னத - பன்னரு மேசையா
இந்நிலம் பிறந்தார் - ஆ!
4.கோனவர் நாட, தானவர் கொண்டாட - என்று
கோத்திரர் தோத்திரஞ் - சாற்றிடவே யூத
கோத்திரன் பிறந்தார் - ஆ!
5.விண்ணுடு தோண, மன்னவர் பேண - ஏரோது
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார் - ஆ!
Tuesday, October 20, 2009
65. ஆர் இவர் ஆராரோ
ஆர் இவர் ஆராரோ - இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?
1.பாருருவாகுமுன்னே - இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? - ஆர்
2.மேசியா இவர்தானோ? - நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? - ஆர்
3.தித்திக்குந் தீங்கனியோ? - நமது
Save Page As PDF
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?
1.பாருருவாகுமுன்னே - இருந்த
பரப்பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருஷ்டித்த மாவலரோ? - ஆர்
2.மேசியா இவர்தானோ? - நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ? - ஆர்
3.தித்திக்குந் தீங்கனியோ? - நமது
தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய
மேவிய விண் ஒளியோ? - ஆர்
4.பட்டத்துத் துரைமகனோ? - நம்மை
பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ? - ஆர்
5.ஜீவனின் அப்பமோதான்? - தாகம்
தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ? - ஆர்
Save Page As PDF
64. ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
1.ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க;
விண் ஜோதி கண்டனர்.
2.அவர்கள் அச்சங் கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.
3.தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.
4.இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்
5.என்றுரைத்தான்; அக்ஷணமே
விண்ணோரம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.
6.மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்;
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர். Save Page As PDF
தம் மந்தை காத்தனர்;
கர்த்தாவின் தூதன் இறங்க;
விண் ஜோதி கண்டனர்.
2.அவர்கள் அச்சங் கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்?
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்.
3.தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்.
4.இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்
5.என்றுரைத்தான்; அக்ஷணமே
விண்ணோரம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்.
6.மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்;
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர். Save Page As PDF
63. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
1.கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்;
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
2.வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க, நர தெய்வமே
அருள் அவதாரமே!
நீர் இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்,
3.வாழ்க, சாந்த பிரபுவே
வாழ்க, நீதி சூரியனே!
மீட்பராக வந்தவர்,
ஒளி ஜீவன் தந்தவர்;
மகிமையை வெறுத்து;
ஏழைக்கோலம் எடுத்து,
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்.
Save Page As PDF
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்;
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர் போல் கெம்பீரித்து
பெத்லேகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே
2.வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்
வாழ்க, நர தெய்வமே
அருள் அவதாரமே!
நீர் இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்,
3.வாழ்க, சாந்த பிரபுவே
வாழ்க, நீதி சூரியனே!
மீட்பராக வந்தவர்,
ஒளி ஜீவன் தந்தவர்;
மகிமையை வெறுத்து;
ஏழைக்கோலம் எடுத்து,
சாவை வெல்லப் பிறந்தீர்
மறு ஜென்மம் அளித்தீர்.
Save Page As PDF
Saturday, October 17, 2009
62. பக்தரே, வாரும் ஆசை ஆவலோடும்
1.பக்தரே, வாரும்
ஆசை ஆவலோடும்;
நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
2.தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்!
3.மேலோகத்தாரே
மா கேம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!
4.இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும். Save Page As PDF
ஆசை ஆவலோடும்;
நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
2.தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்!
3.மேலோகத்தாரே
மா கேம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!
4.இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும். Save Page As PDF
61. ஒப்பில்லா - திரு இரா!
1.ஒப்பில்லா - திரு இரா!
இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்!
அன்பின் அதிசயமாம்!
2.ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்!
எத்தனை தாழ்த்துகிறார்!
3.ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்!
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்! Save Page As PDF
இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்!
அன்பின் அதிசயமாம்!
2.ஒப்பில்லா - திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்!
எத்தனை தாழ்த்துகிறார்!
3.ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்!
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்! Save Page As PDF
Wednesday, October 14, 2009
60.ஆதித் திருவார்த்தை திவ்விய
ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலனாகப் பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட
ஆதிரையோரையீடேற்றிட.
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து,
மரிய கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகி
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
1.ஆதாம் ஓதி ஏவினார்; ஆபிரகாம் விசுவாசவித்து,
யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார். - ஆதி
2.பூலோகப் பாவ விமோசனர், பூரண கிருபையின் வாசனர்
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார். - ஆதி
3.அல்லேலுயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார். - ஆதி Save Page As PDF
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட
ஆதிரையோரையீடேற்றிட.
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து,
மரிய கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகி
மின்னுஞ்சீர் வாசகி, மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம், தாம் தன்னர வன்னர
தீம்; தீம், தீமையகற்றிட
சங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே,
இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
1.ஆதாம் ஓதி ஏவினார்; ஆபிரகாம் விசுவாசவித்து,
யூதர் சிம்மாசனத்தாளுகை செங்கோல்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார். - ஆதி
2.பூலோகப் பாவ விமோசனர், பூரண கிருபையின் வாசனர்
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார். - ஆதி
3.அல்லேலுயா! சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார். - ஆதி Save Page As PDF
59. ராஜன் தாவீதூரிலுள்ள
1.ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே,
மாதா, மரியம்மாள்தான்;
பாலன் இயேசு கிறிஸ்துதான்.
2.வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே;
அவர் வீடோ மாட்டுக் கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே,
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.
3.ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்;
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோருக்கு அடங்கினார்,
அவர்போல் கீழ்ப்படிவோம்,
சாந்தத்தோடு நடப்போம்.
4.பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்;
பலவீன மாந்தன் போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணை செய்வார் நமக்கும்.
5.நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்;
அவர் தாமே மோட்ச லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே.
6.மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக் கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்,
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார். Save Page As PDF
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே,
மாதா, மரியம்மாள்தான்;
பாலன் இயேசு கிறிஸ்துதான்.
2.வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே;
அவர் வீடோ மாட்டுக் கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே,
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.
3.ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்;
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோருக்கு அடங்கினார்,
அவர்போல் கீழ்ப்படிவோம்,
சாந்தத்தோடு நடப்போம்.
4.பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்;
பலவீன மாந்தன் போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணை செய்வார் நமக்கும்.
5.நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்;
அவர் தாமே மோட்ச லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே.
6.மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக் கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்,
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவார். Save Page As PDF
Friday, October 9, 2009
58.கண்டேன் என் கண்குளிர
கண்டேன் என் கண்குளிர - கர்த்தனையின்று
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் - கண்
1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - கண்
2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது - தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்
3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் - அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் - கண்
4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்
5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் - வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் - கண்
6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் - கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் - கண்
7.அன்னையாம் - கன்னியும் ஐயனுடன்
முன்னறி - யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் - கண் Save Page As PDF
கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் - கண்
1.பெத்தலேம் சத்திர முன்னணையில்
உற்றோருக் குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் - கண்
2.தேவாதி தேவனை, தேவசேனை
ஓயாது - தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் - கண்
3.பார்வேந்தர் தேடிவரும் பக்தர் பரனை,
ஆவேந்தர் - அடிதொழும் அன்பனை என் இன்பனை நான் - கண்
4.முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை,
இத்தரை - மீட்க எனை நடத்தி வந்த மன்னவனைக் - கண்
5.மண்ணோர் இருள் போக்கும் மாமணியை
விண்ணோரும் - வேண்டிநிற்கும் விண்மணியைக் கண்மணியைக் - கண்
6.அண்டினோர்க் கன்புருவாம் ஆரணனை
கண்டோர்கள் - கலி தீர்க்கும் காரணனை, பூரணனைக் - கண்
7.அன்னையாம் - கன்னியும் ஐயனுடன்
முன்னறி - யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் - கண் Save Page As PDF
57. பிறந்தார் பிறந்தார் வானவர் புவி
பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
1.மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
2.பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
3.பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்
4.கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
5.குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
6.இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம் Save Page As PDF
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
1.மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
2.பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்
3.பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்
4.கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்
5.குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்
6.இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம் Save Page As PDF
56. பெத்தலையில் பிறந்தவரைப்
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்
1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்
3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக ௦ - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்
4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்
5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே - பெத் Save Page As PDF
போற்றித் துதி மனமே - இன்னும்
1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்
3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக ௦ - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்
4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்
5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே - பெத் Save Page As PDF
55. கண்மணி நீ கண்வளராய்
கண்மணி நீ கண்வளராய்
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்
1.தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ
2.சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ
3.வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ Save Page As PDF
விண்மணி நீ உறங்கிடுவாய்
கண்மணி நீ கண்வளராய்
1.தூங்கு கண்ணே தூதர் தாலாட்ட
நீங்கும் துன்பம் நித்திரை வர
ஏங்கும் மக்கள் இன்னல் நீங்கிட
தாங்கா துக்கம் துயர் மிஞ்சும் கடும் குளிரில்
கந்தை துணி பொதிந்தாயோ
2.சின்ன இயேசு செல்லப்பாலனே
உன்னை நானும் ஏற்பேன் வேந்தனே
என்னைப் பாரும் இன்ப மைந்தனே
உன்னத தேவ வாக்குன்னில் நிறைவேற
ஏழை மகவாய் வந்தனையோ
3.வீடும் இன்றி முன்னனைதானோ
காடும் குன்றும் சேர்ந்ததேனோ
பாடும் கீதம் கேளாயோ நீயும்
தேடும் மெய்யன்பர் உன்னடி பணிய
ஏழ்மைக் கோலம் கொண்டனையோ Save Page As PDF
Friday, October 2, 2009
54. பாரீர் அருணோதயம் போல் உதித்து
1.பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ
2.காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே
3.அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே
4.என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
5.என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே Save Page As PDF
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ
2.காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே
3.அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே
4.என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
5.என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே Save Page As PDF
Thursday, October 1, 2009
53. பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை
1.பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி
2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து
3.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்
4.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ
5.அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி
6.ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு
7.இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே Save Page As PDF
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி
2.காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து
3.எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்
4.வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ
5.அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி
6.ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு
7.இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே Save Page As PDF
Subscribe to:
Posts (Atom)