Thursday, July 30, 2009

30. பூரண ஆசீர் பொழிந்திடுமே

1.பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவ தண்ணீராலே தாகந் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

வானந்திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

2.ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே

3.தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தோங்க பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கி பொங்கிவா

4.மா பரிசுத்த ஸ்தலமிதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்

5.குற்றங்குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மை ஆக்குமே

6.மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாள் வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே Save Page As PDF

29. பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்

1.பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்
விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்

பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்

2.கார்மேகம் மேலே மூடும் பள்ளமென்கிலும்
காற்று கோரமாக மோதும் ஸ்தானத்திலும்
இயேசு பாதை காட்டச் சற்றும் அஞ்சவே மாட்டேன்
இரட்சகர் கைதாங்கத் தைரியம் கொள்ளுவேன் - பின்

3.நாள் தோறும் இயேசு நாதர் கிட்டிச் சேருவேன்
மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்
மீட்பர் என்னை மோசமின்றிச் சுகமே காப்பார்
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார் - பின் Save Page As PDF

Monday, July 27, 2009

28. தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1.அற்புதமான அன்பே - என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே - தோத்திரம்

2.ஜோதியாய் வந்த அன்பே - பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்ய மதுர அன்பே - தோத்திரம்

3.மாய உலக அன்பை நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே - தோத்திரம்

4.ஆதரவான அன்பே - நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னதமாம் தேவ அன்பே
உள்ளம் கவரும் அன்பே - தோத்திரம்

5.வாக்கு மாறாத அன்பே - திரு
வார்த்தையுரைத் தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே - தோத்திரம் Save Page As PDF

Saturday, July 25, 2009

27. தோத்திரம் துதி பாத்திரா உம்மை

தோத்திரம் துதி பாத்திரா உம்மை
இன்றும் என்றும் துதித்திடுவேன்

காத்தீரே என்னைக் கருத்தாக
வழுவாமல் என்னை உமக்காக
எடுத்தீர் எனையும் உமக்காக
கொடுத்தீர் உமையும் எனக்காக

1.வல்ல வான ஞான வினோதா
துதியே துதியே துதித்திடுவேன்
எல்லாக் குறையும் தீர்த்தீரே
தொல்லை யாவும் தொலைத்தீரே
அல்லல் யாவும் அறுத்தீரே
அலையும் எனையும் மீட்டீரே

2.நம்பினோரைக் காக்கும் தேவா
துதியே துதியே துதித்திடுவேன்
அம்புவியாவும் படைத்தீரே
அம்பரா உந்தன் வாக்காலே
எம்பரா எல்லாம் ஈந்தீரே
நம்பினோர்க் குந்தன் தயவாலே

3.கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
அண்ணலே உந்தன் அருளாலே
அடியாரைக் கண் பார்த்தீரே
மன்னா எமக்கும் நீர் தாமே
எந்நாளும் எங்கள் துணை நீரே

4.தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
துதியே துதியே துதித்திடுவேன்
தேவா நீர் உந்தன் சிறகாலே
தினமும் மூடிக் காத்தீரே
தீதணு காதும் மறைவினிலே
தேடியுமதடி தங்கிடுவேன்

5.அல்லேலூயா தோத்திரமே
துதியே துதியே துதித்திடுவேன்
அகில சிருஷ்டிகளும் துதிக்க
அடிமை துதியா திருப்பேனோ
அல்லும் பகலும் நித்தியமாய்
அன்பே உமையும் துதித்திடுவேன்

Save Page As PDF

26. தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும்

தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா
தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்

1.வான தூதர் சேனைகள் மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப்பாடி துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு

2.இத்தனை மகத்துவமுள்ள பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்

3.நின் உதிரமதினால் திறந்த நின் ஜீவ புது வழியாம்
நின் அடியார்க்கு பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்

4.இன்றைத் தினமதிலும் ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

5.நீரல்லால் எங்களுக்குப் பரலோகில் யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறொரு
தேட்டமில்லை பரனே Save Page As PDF

25. தொழுகிறோம் எங்கள் பிதாவே

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

1.வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர்
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம்

2.தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவர்
பதினாயிரமாம் சரணம் சரணம்

3.கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல
சின்னங்கள் சிறந்தாலே
எண்ணில்லாத சரணம் சரணம்

4.கரங்கள் பொன் வளையல்கள் போல
நிறங்களும் தந்தத்தைப் போல
கால்களும் கல் தூண்கள் போல
காண்பதாலே சரணம் சரணம்

5.சமஸ்த சபையின் சிரசே
நமஸ்காரம் எங்கள் அரசே
பிரதான எம் மூலைக்கல்லே
ஏராளமாய் சரணம் சரணம்

6.அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
கூடி வந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம்

7.பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம்
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் Save Page As PDF

Friday, July 24, 2009

24. துதித்துப் பாடிட பாத்திரமே

1.துதித்துப் பாடிட பாத்திரமே
துங்கவன் இயேசுவின் நாமமதே
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே

! அற்புதமே அவர் நடத்துதலே
ஆனந்தமே பரமானந்தமே
நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

2.கடந்த நாட்களில் கண்மணிபோல்
கருத்துடன் நம்மைக் காத்தாரே
கர்த்தரையே நம்பி ஜீவித்திட
கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே

3.அக்கினி ஊடாய் நடந்தாலும்
ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
சோதனையோ மிகப் பெருகினாலும்
ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே

4.இந்த வனாந்திர யாத்திரையில்
இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
போகையிலும் நம் வருகையிலும்
புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே

5.வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே Save Page As PDF

Thursday, July 23, 2009

23. காலையும் மாலையும் எவ்வேளையும்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
கருத்துடன் பாடிடுவேன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
பாடிடும் தோணி கேட்குதே

1.கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
கிருபையாய் இரட்சிப்புமானார்
அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
அனுதினம் வாழ்ந்திடுவேன்

2.எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி
என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான
பாதையில் நடத்திடுவார்

3.ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்
என்றும் தம் மகிமையைக் காண
ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
வாஞ்சித்து நாடிடுவேன்

4.தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
உயர்த்துவார் கன்மலைமேல்

5.எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
என் கர்த்தர் சொன்னதினாலே
தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
தயவாகப் பதிலளிப்பார்

6.தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
கர்த்தர் என்னைச் சேர்த்து கொள்வார்
எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
என்றென்றும் காத்திருக்கும் Save Page As PDF

22. என்னை மறவா இயேசு நாதா

என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

1.வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே - என்னை

2.பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவரு மென்னை - என்னை

3.தாய் தன் சேயை மறந்துவிட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே - என்னை

4.திக்கற்றோராய்க் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா தேதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே - என்னை

5.உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே - என்னை

6.உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே - என்னை

7.என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்ந்திடுமே - என்னை Save Page As PDF

21. எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

1.ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே சொந்தமும் நீரே - எந்த

2.தாய் தந்தை நீரே தாதையும் நீரே
தாபரம் நீரே என் தாரகம் நீரே - எந்த

3.வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே
வாதையில் நீரே பாதையில் நீரே - எந்த

4.வானிலும் நீரே பூவிலும் நீரே
ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே - எந்த

5.துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் - எந்த

6.ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே
ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே - எந்த

7.ஞானமும் நீரே கானமும் நீரே
தானமும் நீரே என் நாதனும் நீரே - எந்த

8.ஆறுதல் நீரே ஆதாரம் நீரே
ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே - எந்த

9.மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே
மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே - எந்த

10.தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜராஜனாம் என் சர்வமும் நீரே - எந்த Save Page As PDF

20. இயேசு என்ற திருநாமத்திற்கு

இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம்

1.வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது - இயேசு

2.வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே - இயேசு

3.பாவத்திலே மாலும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது - இயேசு

4.உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது - இயேசு

5.சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று மகற்றிடும் நாமமது - இயேசு Save Page As PDF

Monday, July 20, 2009

19.என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்

என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்
ஏற்று கொள்ளும் இயேசுவே

அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது - என்னை

1.அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்
அடிமைத்தனத்தினின்றும்
சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்ட
எந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் - என்னை

2.ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீனமாக்கி வைத்தேன்
பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கிறேன் கருணை செய்தேவா - என்னை

3.நீதியினாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேனுமக்கு
ஜோதி பரிசுத்தராலயமாகவே
சொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை - என்னை Save Page As PDF

18. தம் கிருபை பெரிதல்லோ

தம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை, கிருபை தாருமே

1.தாழ்மை உள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாள் எல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன்
சேவை செய்யக் கிருபை தாருமே - தம் கிருபை

2.நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்று கொண்டேன்
காத்துக் கொள்ள கிருபை தாருமே - தம் கிருபை

3.தினம் அதிகாலையில் தேடும் புதுக்கிருபை
மனம் தளர்ந்த நேரத்திலும்
பெலவீன சரீரத்திலும்
போதுமே உம் கிருபை தாருமே - தம் கிருபை

4.மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
மூடும் திரை கிழிந்திடவே
தைரியமாய்ச் சகாயம் பெற
தேடி வந்தேன் கிருபை தாருமே - தம் கிருபை

5.ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியம் உம் கிருபை
என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
நீதியுமே சமாதானமுமே
நிலை நிற்கும் கிருபை தாருமே - தம் கிருபை

6.ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெப வரம் கிருபை தாருமே - தம் கிருபை

7.கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை
காத்திருந்தே அடைந்திடவே
இயேசுவே உம்மைச் சந்திக்கவே
இரக்கமாய்க் கிருபை தாருமே - தம் கிருபை

Save Page As PDF

Friday, July 17, 2009

17. நான் உம்மைப்பற்றி இரட்சகா!

1.நான் உம்மைப்பற்றி இரட்சகா!
வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தான்டவா
நான் சாட்சி கூறுவேன்

சிலுவையண்டையில் நம்பிவந்து நிற்கையில்
பாவப்பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப்பாடுவேன்

2.ஆ! உந்தன் நல்ல நாமத்தை
நான் நம்பிச் சார்வதால்
நீர் கைவிடீர் இவ்வேழையைக்
காப்பீர் தேவாவியால்

3.மாவல்ல வாக்கின் உண்மையை
கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை
விடாமல் காக்கிறீர்

4.நீர் மாட்சியோடு வருவீர்
அப்போது களிப்பேன்
ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்
மெய்ப் பாக்கியம் அடைவேன்

Save Page As PDF

16. அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே

1.அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப இறங்கி வாருமே

2.பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே

3.தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்

4.துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே

5.அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்போதே Save Page As PDF

15. ஆவியானவரே அன்பின் ஆவியானவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே

1.உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே

2.பத்மு தீவினிலே பக்தனை தேற்றிநீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே

3.சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்மா தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே

4.ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே Save Page As PDF

Thursday, July 16, 2009

14. நான் பாவி தான் ஆனாலும் நீர்

1.நான் பாவி தான் ஆனாலும் நீர்
மாசற்ற இரத்தம் சிந்தினீர்
வா என்று என்னை அழைத்தீர்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

2.நான் பாவி தான் என் நெஞ்சிலே
கறைபிடித்திருக்குதே
என் கறை நீங்க இப்போதே
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

3.நான் பாவி தான் - பயத்தினால்
அலைந்து பாவப்பாரத்தால்
அமிழ்ந்து மாண்டு போவதால்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

4.நான் பாவி தான் - மெய்யாயினும்
சீர் நேர்மை செல்வம் மோட்சமும்
உம்மாலே பெற்று வாழவும்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

5.நான் பாவி தான் இரங்குவீர்
அணைத்துக் காத்து இரட்சிப்பீர்
அருளாம் செல்வம் அளிப்பீர்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

6.நான் பாவி தான் - அன்பாக நீர்
நீங்காத் தடைகள் நீக்கினீர்
உமக்குச் சொந்தம் ஆக்கினீர்
என் மீட்பரே வந்தேன் - வந்தேன்

Save Page As PDF

13. கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை
கண்கள் கலங்கிடுதே
கர்த்தா உம்பாடுகள் இப்போதும் நினைத்தால்
நெஞ்சம் நெகிழ்ந்திடுதே - நெஞ்சம்

1.கெத்செமனே பூங்காவினில்
கதறி அழும் ஓசை
எத்திசையும் தொனிக்கின்றதே
எந்தன் மனம் திகைக்கின்றதே
கண்கள் கலங்கிடுதே

2.சிலுவையில் வாட்டி வதைத்தனரோ
உம்மைச் செந்நிறம் ஆக்கினரோ
அப்போதும் அவர்க்காய் வேண்டிநீரே
அன்போடு அவர்களைக் கண்டீரன்றோ
அப்பா உம்மனம் பெரிதே

3.எம்மையும் உம்மைப் போல் மாற்றிடவே
உம் ஜீவன் தந்தீரன்றோ
எங்களை தரை மட்டும் தாழ்த்துகின்றோம்
தந்துவிட்டோம் அன்பின் கரங்களிலே
ஏற்று என்றும் நடத்தும்

Save Page As PDF

Tuesday, July 14, 2009

12. விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்

விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்

1.ஜலத்தின் மேல் அசைவாடிய தூய தேவ ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய என்மேல் அசைவாடிடும்

2.முழங்காலை முடக்கியது முழங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்து செல்லும் என்னையே

3.அக்கினி அபிஷேகம் இன்று வேண்டும் தெய்வமே
எந்நாளும் என் பாத்ரம் நிரம்பி வழிய செய்யுமே

4.அக்கினி இரத்தத்தின் மேல் என்னைக் கொண்டு செல்லுமே
பரலோக தூதருடன் ஆராதிக்க செய்யுமே Save Page As PDF

11. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை

1.ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

2.உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான்

3.பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே

4.என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான்

5.ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் - தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான்

6.நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான்

7.சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் Save Page As PDF

10. வனாந்திர யாத்திரையில்

வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே

1.செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் - வனாந்திர

2.தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே - வனாந்திர

3.இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே - வனாந்திர

Save Page As PDF

9. திருக்கரத்தால் தாங்கி என்னை

1.திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே

2.உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

3.ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

4.அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை


Save Page As PDF

Monday, July 13, 2009

8. மன்னன் இயேசு வருகின்றார்

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா! ஆனந்தமே!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)


1.மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் - அல்லேலூயா

2.பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே - அல்லேலூயா

3.வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே - அல்லேலூயா

Save Page As PDF

7. நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே


அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை


1.உம் வல்ல செயல்கள்
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்பவரே
நன்றி நன்றி அய்யா

நல்லவரே வல்லவரே
ஆராதனை ஆராதனை

2.பலியான செம்மறி
பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே

பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

3.எத்தனை இன்னல்கள்
என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேனையா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே

இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை Save Page As PDF

6,இயேசுவைப்போல் அழகுள்ளோர்

இயேசுவைப்போல் அழகுள்ளோர் யாருமில்லை பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை

பூரண அழகுள்ளவரே! பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்


1.சம்பூரண அழகுடன் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுகீந்தேன் - பூரண

2.எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய்
உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் - பூரண

3.நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் பாவ மோகமே
என்மேல் வந்து வேகமாக மோதியடித்தால் - பூரண

4.தினந்தோறும் உம்மிலுள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே - பூரண

Save Page As PDF

Friday, July 10, 2009

5.எப்படி பாடுவேன் நான்

எப்படி பாடுவேன் நான் - என்
இயேசு எனக்கு செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் - 2


1.ஒரு வழி அடையும்போது
புது வழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவர் அல்லோ - 2


2.எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன் - 2

3.கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர் - 2 Save Page As PDF