படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையே
1.வாலிபப்படகே உல்லாசப்படகே
தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே - படகோ
2.குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையே அழிக்கும் படகே
சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே - படகோ
1 comment:
எனக்கு மிகவும் பிடித்த
பாடல்களில் ஒன்று இந்தப் பாடல்.
இதற்கு ஒலி வடிவம் வைத்துள்ளீர்களா..?
(Have you audio version to this..?)
Post a Comment