1.கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்;
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்.
2.உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்;
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்.
3.பூலோகம் உருவாகியே,
மலைகள் தோன்றுமுன்;
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்.
4.ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே;
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே.
5.சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்;
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்.
6.கர்த்தாவே, யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்;
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்.
Save Page As PDF
Wednesday, November 25, 2009
Friday, November 20, 2009
75. இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக
நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்
1.காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்,
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது;
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன், - இம்
2.பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தும்;
வலிய தீமையை வென்றோம், நலியும் ஆசையைக் கொன்றோம்
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் - இம்
3.சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து, நொறுக்கினதைக் கட்டிக்,
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து, தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் - இம் Save Page As PDF

Tuesday, November 10, 2009
74. எந்நாளுமே துதிப்பாய்
எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது, - எந்நாளு
1.பாவங்கள் எத்தனையோ? - நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி, - எந்நாளு
2.எத்தனையோ கிருபை - உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை?
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி,
நித்தியமான ஜீவனை மீட்டதால், - எந்நாளு
3.நன்மையாலுன் வாயை - நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை;
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால், - எந்நாளு
4.பூமிக்கும் வானத்துக்கும் - உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்திய மேயிது; - எந்நாளு
5.மன்னிப்பு மாட்சிமையாம் - மாதேவன ருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில் உன்பாவம் அகன்றத்தூரமே - எந்நாளு
6.தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோடிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு?
எந்த வேளையும் அவரோடு தங்கினால்,
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே - எந்நாளு Save Page As PDF

Monday, November 2, 2009
73. ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்
ஞானரட்சகர் நாதர் நமை - இந்த
நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ் - ஆனந்தமே
1.சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
தளராதுள கிறிஸ்தானவராம்
எங்கள் ரட்சகரேசு நமை - வெகு
இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால், - புகழ் - ஆனந்தமே
2.முந்து வருட மதினில் மனுடரில் வெகு
மோசகஸ்திகள் தனிலேயுழல,
தந்து நமக்குயிருடையுணவும் - வெகு
தயவுடன் இயேசு தற்காத்ததினால் - புகழ் - ஆனந்தமே
3.பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை - இத்
தரை தனில் குறை தணித்தாற்றியதால் - புகழ் - ஆனந்தமே Save Page As PDF

Subscribe to:
Posts (Atom)