தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்
பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி
1.சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என் உள்ளம் கழுவிடுமே - பாரில்
2.மக்களின் நோய்களை நீக்கினவர்
பாவியென் பாவநோய் நீக்கிடுமே - பாரில்
3.துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே - பாரில்
5.தன் ஜீவன் எனக்காகத் தந்தவரே
என்னுள்ளம் பலியாக ஏற்றிடுமே - பாரில்
6.பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்குமோரிடம் தாருமே - பாரில்
Save Page As PDF
1 comment:
i can't read tamil...can you please transliterate this song in english?...i need it for a program...thanks in advance
Post a Comment