Friday, April 23, 2010

134. ஆவியானவரே ஆவியானவரே பரிசுத்த

ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே
அன்பின் ஆவியே
அபிஷேகம் இன்று தாருமே

1.பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
கன்மலை தடாகமாக வேண்டுமே
கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே

2.ஜனத்தின்மேல் அசைவாட வேண்டுமே
ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
ஒழுங்கின்மை மாற வேண்டுமே
வெறுமை நிறைவாக வேண்டுமே

3.நாவிலே அக்கினி வேண்டுமே
உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே
பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
இருக்குமிடம் அசைய வேண்டுமே

4.அந்நிய பாஷைகளைப் பேசியே
மண்ணிலே சாட்சியாக வாழுவேன்
விண்ணிலே உம்மை நான் சந்திக்க
புண்ணியரே என்னையும் நிரப்புமே

5.வல்லமை வரங்கள் வேண்டுமே
சொல்லவும் வாக்கு வேண்டுமே
கள்ளங்கபடு மாற வேண்டுமே
உள்ளத்திலே தேவ அன்பு ஊற்றுமே

6.உள்ளத்திலே ஆறுதல் வேண்டுமே
வாழ்விலே மாறுதல் வேண்டுமே
ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
பாழிடங்கள் அரண்மனையாகவே
Save Page As PDF

133. கதிரவன் தோன்றும் காலையிதே

கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே - நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே

1.வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே - கதிரவன்

2.காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களைப் போல்
தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீராம்
தற்பரன் இயேசுவைத் தேடிடுவோம் - கதிரவன்

3.கர்த்தர் கிருபை என்றென்றும் ஓங்க
கர்த்தரே நல்லவர் என்றுரைப்போம்
கேருபீன்கள் மத்தியில் வாழும்
கர்த்தர் இக்காலையில் எழுந்தருள்வார் - கதிரவன்

4.எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்
என் கரங்கள் குவிந்தே வணங்கும்
பாக்கியம் நான் கண்டைந்தேனே
யாக்கோபின் தேவனே என் துணையே - கதிரவன்

5.காலை விழிப்பே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து வேதமே ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன் - கதிரவன்

6.வானம் பூமி யாவையும் படைத்தீர்
வானம் திறந்தே தோன்றிடுவீர்
ஆவல் அடங்க என்னையும் அழைக்க
ஆத்தும நேசரே வந்திடுவீர் - கதிரவன்
Save Page As PDF

132. அன்பே அன்பே அன்பே

அன்பே, அன்பே, அன்பே
ஆருயிர் உறவே!
ஆனந்தம் ஆனந்தமே

1.ஒரு நாளுந்தயை கண்டேனையா
அன்னா ளெனை வெறுத்தேனையா
உம் தயை பெரிதையா - என் மேல்
உம் தயை பெரிதையா - அன்பே

2.பரலோகத்தின் அருமைப் பொருளே
நரலோகரி லன்பேனையா
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ - அன்பே

3.அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - என்னையும்
அணைத்தீர் அன்பாலே - அன்பே

4.பூலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பூவைப் போல்
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா - அன்பே

5.இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற் கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ - அன்பே

Save Page As PDF

Tuesday, April 20, 2010

131. மகிமை மாட்சிமை நிறைந்தவரே

மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்

1.உன்னத தேவன் நீரே!
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே!
என்றும் தொழுதிடுவோம் - மகிமை

2.ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே!
ஒளியினை தந்ததுமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே!
என்றும் தொழுதிடுவோம் - மகிமை

3.பரிசுத்த தேவன் நீரே!
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே!
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம் - மகிமை

4.நித்திய தேவன் நீரே!
நீதி நிறைந்தவரே!
அடைக்கலமானவரே!
அன்பு நிறைந்தவரே!
நல்லவரே வல்லவரே!
என்றும் தொழுதிடுவோம் - மகிமை

5.அற்புதம் தேவன் நீரே!
ஆசீர் அளிப்பவரே!
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம் - மகிமை
Save Page As PDF

Monday, April 12, 2010

130. இந்த காலம் பொல்லாதது

இந்த காலம் பொல்லாதது
உன்னைக் கர்த்தர் அழைக்கிறார்
நீ வாழும் உலகம் தான்
அது வாடகை வீடு தான்

1.உன்னை ரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன்
என்று வாக்கு அளித்தவர்
இன்னும் காத்து வருகிறார்

2.வாலிப நாட்களில் உன் தேவனைத் தேடிவா
சாத்தான் களத்தினில் போராட
ஜெய வீரனாய் திகழ வா

3.பாவத்தின் சம்பளம் எரிநரகம் தான் திண்ணமே
சத்திய தேவனின் கிருபையோ
நித்திய ஜீவனை அருளுமே

4.காலமோ முடியுதே தேவ ராஜ்ஜியம் நெருங்குதே
மனம் திரும்பி நீ வாழவே
மன்னன் இயேசுன்னை அழைக்கிறார்


Save Page As PDF

129. ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை ராஜாதி ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன்

1.அற்புதமான அன்பே - என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே - ஸ்தோத்தி

2.ஜோதியாய் வந்த அன்பே - பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்விய மதுர அன்பே - ஸ்தோத்தி

3.மாய உலக அன்பை - நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே - ஸ்தோத்தி

4.ஆதரவான அன்பே - நித்தம்
அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே
உன்னத மா தேவ அன்பே
உள்ளங் கவரும் அன்பே - ஸ்தோத்தி

5.வாக்கு மாறாத அன்பே - திரு
வார்த்தை உரைத்தென்னைத் தேற்றும் அன்பே
சர்வ வல்ல தேவ அன்பே
சந்ததம் ஓங்கும் அன்பே - ஸ்தோத்தி

Save Page As PDF