ஏங்குதே என்னகந்தான், துயர்
தாங்குதில்லை முகந்தான்
பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர்கண்டு - ஏங்குதே
1.மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு - ஏங்குதே
2.யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யேரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு - ஏங்குதே
3.நீண்ட குரு செடுத்து, எருசலேம்
தாண்டி மலையெடுத்து,
ஈண்டல் பின்னே தொடுத்து, அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே - ஏங்குதே
No comments:
Post a Comment