Wednesday, January 27, 2010

86. எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?

1.எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக, ஐயா என் ஏசு நாதா - எங்கே

2.தோளில் பாரம் அழுந்த, தூக்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே, தாப சோபம் உற, நீர் - எங்கே

3.வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கி வர, - எங்கே

4.தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர,
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர - எங்கே

5.வல்ல பேயைக் கொல்லவும், மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் -எங்கே


6.மாசணுகாத சத்திய வாசகனே, உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து - எங்கே
Save Page As PDF

85. ஏன் இந்தப் பாடுதான்

ஏன் இந்தப் பாடுதான்! - சுவாமி
என்ன தருவேன் இதற்கீடுநான்?


ஆனந்த நேமியே - எனை ஆளவந்த குரு சுவாமிய


1.கெத்செமனே யிடம் ஏகவும் - அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே, மனம் நோகவும் - சொல்
அளவில்லாத் துயரமாகவும்


2.முழந்தாள் படியிட்டுத் தாழவும் - மும்
முறை முகம் தரைபட வீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும், - கொடு
மரண வாதையினில் மூழ்கவும்


3.அப்பா, பிதாவே என்றழைக்கவும், - துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், - ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்


4.ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும், - உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்

Save Page As PDF

84. ஏங்குதே என்னகந்தான்

ஏங்குதே என்னகந்தான், துயர்
தாங்குதில்லை முகந்தான்


பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர்கண்டு - ஏங்குதே

1.மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு - ஏங்குதே


2.யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யேரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு - ஏங்குதே

3.நீண்ட குரு செடுத்து, எருசலேம்
தாண்டி மலையெடுத்து,
ஈண்டல் பின்னே தொடுத்து, அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே - ஏங்குதே

Save Page As PDF

Friday, January 8, 2010

83. பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்

தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்

1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக

பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க

பிறந்து வந்தார்

உலகை ஜெயிக்க வந்தார்

அல்லேலுயா பாடுவோம்

மீட்பரை வாழ்த்துவோம்

2. உண்மையின் ஊழியம் செய்திடவே

வானவர் இயேசு பூவில் வந்தார்

வல்லவர் வருகிறார்

நம் மீட்பர் வருகிறார்

3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து

வேதத்தின் ஓளியை பரப்பினாரே

இருளை அகற்றுவார்

நம்மை இரட்சித்து நடத்துவார்

Save Page As PDF