Friday, June 10, 2011

185. என் உயிரான உயிரான

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே
Save Page As PDF

184. கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை - (7) - கிருபையால்

1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை
கிருபை - (7) - கிருபையால்

2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை
கிருபை - (7) - கிருபையால்

3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை
கிருபை - (7) - கிருபையால்

4. வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்தது உங்க கிருபை
கிருபை - (7) - கிருபையால்

5. கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
கிருபை - (7) - கிருபையால்


Save Page As PDF

183. தேவனே என் நண்பனே எனக்காய்

தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)

சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)

1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் - தேவனே

2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் - தேவனே

3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் - தேவனே

Save Page As PDF

182. யேஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் - (2)

யேஹோவா ஷாலோம்
யேஹோவா ஷம்மா
யேஹோவா ரூவா
யேஹோவா ரப்பா -(2)

1. எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
என் தாகமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா - யேஹோவா

2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனா
என்னை என்றும் தாங்குவீங்க - யேஹோவா

3. லோஹினும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க - யேஹோவா




Save Page As PDF