Friday, December 11, 2009

82.உலகோர் உன்னைப் பகைத்தாலும்

1.உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறுவாயா? (2)
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா? (2)

உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய் (2)

2.உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா?
ஊழியம் செய்ய வருவாயா? (2) - உனக்காக

3.மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப்புல் வெளியில் (2)
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? (2) - உனக்காக

4.இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர் (2)
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயோ? (2) - உனக்காக

5.ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே (2)
யாரை நான் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக (2) - உனக்காக Save Page As PDF

81. இருள் சூழ்ந்த லோகத்தில்

1.இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணி போல் என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் நிறைந்து
காலமெல்லாம் பாடுவேன் (2)

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

2.மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் - அஞ்சிடேன்

3.அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் - அஞ்சிடேன் Save Page As PDF

80. மணவாளன் கர்த்தர் இயேசு

மணவாளன் கர்த்தர் இயேசு வருகின்றாரே
மணவாட்டி சந்திக்க ஆயத்தம்தானா?

பிரியமே நீ ரூபவதி
எழுந்து வா உன் நேசரைச் சந்திக்கவே - மணவாளன்

1.குருவிகள் பாடும் சத்தம் எங்கும் கேட்குதே
காட்டுப்புறா சப்தம் நம் தேசம் நிறையுதே
அத்திமரம் காய்காய்க்க காலம் வந்தததே
திராட்சைக் கோடி பூ பூத்து வாசம் பெருகுதே - என் பிரியமே

2.மாரிக்காலம் சென்றது மழையும் வந்தது
பூமியிலே புஷ்பங்கள் பூத்துக் குலுங்குதே
கன்மலையின் சிகரங்களில் தங்கும் புறாவே
கர்த்தர் இயேசு வரும் நாளை சொல்லிப் பாடிடு - என் பிரியமே

3.சாரோனின் ரோஜாவாம் கர்த்தர் இயேசு
பள்ளத்தாக்கின் லீலியாம் பரமன் இயேசு
தாகம் தீர்க்கும் ஜீவ நதி கர்த்தர் இயேசு
பாவம் போக்கும் பரிகாரி பரமன் இயேசு - என் பிரியமே Save Page As PDF

79. என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்

என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
அவர் தூங்குவது மில்லை உறங்குவதுமில்லை (2 )

1.என்மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே - என்னை



2.பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
கேடகமும் துருகமும் பெலன் அவரே - என்னை



3.ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் - என்னை Save Page As PDF

Tuesday, December 8, 2009

78. மந்தையில் சேரா ஆடுகளே

மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே

அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு
நடத்திடுவார்

1.காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா?
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை

2.சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
எனை அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்

3.எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும் Save Page As PDF

77. கரையேறி உமதண்டை

1.கரையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ

ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக்
கண்டுகொள்ளல் ஆகுமா?

2.ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
தூக்கிப்பார் நிர்ப்பந்தராய்

3.தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன்

4.வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாழும் வருமோ?

5.பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்துசேர உழைப்பீர் Save Page As PDF