Wednesday, November 19, 2008

4. பலி பீடத்தில் என்னை

பலிபீடத்தில் என்னைப் பரனே

படைக்கிறேனே இந்த வேளை

அடியேனை திருச்சித்தம் போல

ஆண்டு நடத்திடுவீர்


கல்வாரியீன் அன்பினையே

கண்டு விரைந்தோடி வந்தேன்

கழுவும் உம் திரு இரத்தத்தாலே

கரை நீங்க இருதயத்தை


1.நீரன்றி என்னாலே பாரில்

ஏதும் நான் செய்திட இயலேன்

சேர்ப்பீரே வழுவாது என்னை

காத்து உமக்காய் நிறுத்தி - கல்வாரியீன்


2.ஆவியோடாத்மா சரீரம்

அன்பரே உமக்கென்றும் தந்தேன்

ஆலய மாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் - கல்வாரியீன்


3.சுயம் என்னில் சாம்பலாய் மாற

சுத்தாவியே அனல் மூட்டும்

ஜெயம் பெற்று மாமிசம் மாய

தேவா அருள் செய்குவீர் - கல்வாரியீன்


4.பொன்னையும் பொருளையும் விரும்பேன்

மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்

மன்னவன் இயேசுவின் சாயல்

இந்நிலத்தே கண்டதால் - கல்வாரியீன்

Save Page As PDF

Saturday, October 11, 2008

3.உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பான்னு கூப்பிடவா?

உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அம்மான்னு கூப்பிடவா?

அப்பான்னு கூப்பிடுவேன் உம்மை

அம்மான்னு கூப்பிடுவேன்

1.கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா

அம்மான்னு சொல்லணும்

தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா

அப்பான்னு சொல்லணும்

என்னைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும்

பார்த்தா அம்மான்னு சொல்லணும்

என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா

அப்பான்னு சொல்லணும்

2.கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா

அம்மான்னு சொல்லணும்

விண்ணப்பத்தைக் கேட்பதைப் பார்த்தா

உம்மை அப்பான்னு சொல்லணும்

என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா

உம்மை அம்மான்னு சொல்லணும்

உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா

உம்மை அப்பான்னு சொல்லணும்

Save Page As PDF

Friday, October 3, 2008

2.கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில்

உமக்கொப்பானவர் யார்?

வானத்திலும், பூமியிலும்

உமக்கொப்பானவர் யார்?

உமக்கொப்பானவர் யார்?

உமக்கொப்பானவர் யார்?

வானத்திலும், பூமியிலும்

உமக்கொப்பானவர் யார்?


1.செங்கடலை நீர் பிளந்து

உந்தன் ஜனங்களை நடத்தி சென்றீர்

நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும்

வாக்கு மாறாதவர்

2.தூதர்கள் உண்ணும் உணவால்

உந்தன் ஜனங்களை போஷித்தீரே

உம்மைப் போல யாருண்டு

இந்த ஜனங்களை நேசித்திட


3.கன்மலையை நீர் பிளந்து

உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்

உம் நாமம் அதிசயம்

இன்னும் அற்புதம் செய்திடுவீர்

Save Page As PDF

Tuesday, September 30, 2008

1.வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்
உம் வல்லமையால் என்னை நிறைத்து - நீர்
ஆளுகை செய்யும் - (2)


1.ஜீவ தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்றே
ஆலோசனை கர்த்தரே
ஆளுகை செய்யும் (2) - வாரும்


2.அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
ஆவியை ஊற்றும் (2) - வாரும் Save Page As PDF