Wednesday, May 19, 2010

164. கலிலேயா கடற்கரையோரம்

கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2.நண்பர்கள் பகைத்தாலும் - இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் - அவர்
நமையினால் வழி நடத்திடுவார் - நெஞ்சமே

3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் - மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் - நெஞ்சமே
Save Page As PDF

163. கர்த்தரின் கை குறுகவில்லை

1.கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

2.திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் - விசுவாசியே

3.நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் - விசுவாசியே

4.மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் - விசுவாசியே
Save Page As PDF

162. அன்புள்ள இயேசையா

அன்புள்ள இயேசையா
உம பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

1.காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

2.பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

3.தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

Save Page As PDF

Tuesday, May 18, 2010

161. அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

அழைக்கிறார் அழைக்கிறார் இதோ
நீயும் வா! உந்தன் நேசர்
ஆவலாய் அழைக்கிறார் இதோ

1.பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்
கல்வாரியின் மேட்டினில்; கண்கொள்ளாத காட்சியே
கண்டிடாய் வேண்டிடாய் பாவ பாரம் நீங்கிடும்

2.நோயையும் ஏற்றவர் ; பேயையும் வென்றவர்
நீதிபரன் உன் நோயை; நிச்சயமாய்த் தீர்த்தாரே
நோயுற்ற உன்னையே; நேயமாய் அழைக்கிறார்

3.துன்பம் சகித்தவர்; துயரடைந்தவர்
இன்னலுற்ற உன்னையே, அண்ணல் ஏசழைக்கிறார்
துன்புறும் நெஞ்சமே; துரிதமாய் நீ வாராயோ

4.அந்தக் கேடடைந்தார்; அழகற்றுத் தோன்றினார்
சொந்தமாகச் சேர்த்திட ; இந்தப் பாடடைந்தாரே
நிந்திக்கும் உன்னையும்; சந்திப்பார் நீ வாராயோ

5.கல்லறை திறக்க; காவலர் நடுங்க
கஸ்திகளடைந்தாரே ; கட்டுகளறுத்தாரே
உயிர்த்தார் ஜெயித்தார் உண்டு மீட்புனக்குமே

6.சாந்த சொரூபனே சத்திய வாசனே
வஞ்சமற் வாயனே, வந்தணைக்கும் நேயனே
தஞ்சமே தன்னையே; தந்துனை அழைக்கிறார்

Save Page As PDF

Monday, May 17, 2010

160. பயப்பட மாட்டேன் நான் பயப்பட

பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்

1.உதவி செய்கிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

2.காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

3.பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

4.பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நான் தொடர்ந்து ஓடுவேன்

5.வலைகள் வீசுவோம் மீன்களை பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

6.உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Save Page As PDF

159. ஒரு தாய் தேற்றுவதுபோல்

ஒரு தாய் தேற்றுவதுபோல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா - (4)

1.மார்போடு அணைப்பாரே
மனக் கவலை தீர்ப்பாரே

2.கரம்பிடித்து நடத்துவார்
கன் மலைமேல் நிறுத்துவார்

3.எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே

4.ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
Save Page As PDF

158. என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சித்தவரும் அவரே
என் ஜீவனுக்கரணானவர் - நான்
யாருக்கும் அஞ்சமாட்டேன்

1.தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
தந்தை இயேசென்னை சேர்த்துக்கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார்

2.தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
தேவன் அருகில் வந்து என்னை காத்திடுவார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே

Save Page As PDF