Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Sunday, October 23, 2011

186. என் நேசர் வெள்ளைப் போள

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே - நான் (2)

அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் - என் நேசர்

1.காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் - என் நேசர்

2.வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் - என் நேசர்
Save Page As PDF

Wednesday, June 23, 2010

170. சின்னஞ் சிட்டுக் குருவியே

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு .......
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே - உன்னை
அழகாக படைச்சது யாரு

ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) - உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா

ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா - அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல...ல...ல...ல...ல...ல...


Save Page As PDF

Friday, June 18, 2010

169. அன்பரின் நேசம் ஆர் சொல்ல

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் - அதிசய

1.இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே - அதிசய

2.பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே - அதிசய

3.வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? - அதிசய

4.செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே - அதிசய

5.பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே - அதிசய

Save Page As PDF

Monday, June 7, 2010

168. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

1.மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4.திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

Save Page As PDF

Friday, June 4, 2010

167. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பது தான் - (2)
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா .....(4)

2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்புகழ் பாடி மகிழ்வதுதான்
இரவும் பகலும் புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்

3.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான்
இரவும் பகலும் உம்மைத் தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத் தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத் தான் நான் நேசிப்பேன்

4.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான்
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்
Save Page As PDF

166. இயேசுவே உம் நாமத்தினால்

1.இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே

எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்

2.நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே

3.பொன்னை நாடி மண்ணையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால்

4.உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ! பாவியே
இன்றும் இயேசுவண்டை வாராயோ
நித்திய ஜீவன் பெற்றிடவே

5.இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால்

Save Page As PDF

165. இதுவரை செய்த செயல்களுக்காக

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 )

1.உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)

2.தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)

3.உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

Save Page As PDF

Wednesday, May 19, 2010

164. கலிலேயா கடற்கரையோரம்

கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2.நண்பர்கள் பகைத்தாலும் - இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் - அவர்
நமையினால் வழி நடத்திடுவார் - நெஞ்சமே

3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் - மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் - நெஞ்சமே
Save Page As PDF

163. கர்த்தரின் கை குறுகவில்லை

1.கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே

விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்

2.திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் - விசுவாசியே

3.நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் - விசுவாசியே

4.மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் - விசுவாசியே
Save Page As PDF

162. அன்புள்ள இயேசையா

அன்புள்ள இயேசையா
உம பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

1.காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

2.பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

3.தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் - அன்புள்ள

Save Page As PDF

Monday, May 17, 2010

158. என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சித்தவரும் அவரே
என் ஜீவனுக்கரணானவர் - நான்
யாருக்கும் அஞ்சமாட்டேன்

1.தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
தந்தை இயேசென்னை சேர்த்துக்கொள்வார்
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார்

2.தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
தேவன் அருகில் வந்து என்னை காத்திடுவார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே

Save Page As PDF

157. ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே - (2 )

எண்ணெய் அபிஷேகமே என்தலையை நனைக்க
ஆவியால் நிரப்புமே பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம் எந்தன் ஆவல் தீர்த்திடும் - ஊற்றப்பட

1.தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே - எண்ணெய்

2.ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் - எண்ணெய்

3.ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் - எண்ணெய்

4.ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் - எண்ணெய்

5.ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே - எண்ணெய்

Save Page As PDF

156. சந்தோசம் பொங்குதே

சந்தோசம் பொங்குதே (2)
சந்தோசம் என்னில் பொங்குதே - அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோசம் பொங்கி பொங்குதே

1.வழி தப்பி நான் திரிந்தேன் பாவ பழியதை சுமந்தலைந்தேன்
அவர் அன்புக்குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம்நீங்கிற்றே

2.சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
இந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே

3.பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்

Save Page As PDF

Friday, May 14, 2010

155. இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை

1.இயேசுவை நம்பினோர் மாண்டதில்லை
என்னென்ன துன்பங்கள் நேரிட்டாலும்
சிங்கத்தின் வாயினின்றும் இரட்சிப்பார்
பங்கம் வராதென்னை ஆதரிப்பார்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே
நம்பினோரைக் கிருபை சூழ்ந்திடுதே
இம்மட்டும் காத்தவர் இம்மானுவேல்
இன்னமும் காத்துன்னை நடத்துவார்

2.நாசியில் சுவாசமுள்ள மாந்தரை
நம்புவதல்ல தம் ஆலோசனை
கோர பயங்கரக் காற்றடித்தும்
கன்மலை மேல் கட்டும் வீடு நிற்கும்

3.விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்
வறட்சி மிகுந்த காலத்திலும்
பக்தன் வலதுபாரிசத்திலே
கர்த்தர் தாம் நிற்பதால் அசைந்திடான்

4.இயேசுவின் நாமத்தில் ஜெயம் பெற்றே
ஏகிப் பறந்தோடும் பக்தரோடே
சேர்ந்தென்றும் வாழ்ந்திடும் ஐக்கியத்திலே
ஜெய கெம்பீரமே உனக்குண்டே

5.ஏழை உன் ஆத்மா பாதாளத்தில்
என்றும் அழிந்திடவிட்டு விடார்
தம் சமூகம் நித்ய பேரின்பமே
சம்பூர்ண ஆனந்தம் பொங்கிடுமே

6.அங்கே அனேக வாசஸ் தலங்கள்
அன்பின் பிதா வீட்டில் ஜொலிக்குதே
நேர்த்தியான இடங்களில் உந்தன்
நித்திய பங்கு கிடைத்திடுமே

Save Page As PDF

154. அப்பா உம் கிருபைகளால்

அப்பா உம் கிருபைகளால் - என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் - என்னை
அணைத்துக் கொண்டீரே

1.தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது - 2
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் கிருபையிது - 2

2.வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை - 2
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை - 2

3.கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை - 2
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியை தந்திட்ட தேவ கிருபை - 2

Save Page As PDF

153. அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில்

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் ()

1.தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

2.குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

3.பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் - இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Save Page As PDF

152. சுத்தம் பண்ணப் படாத தேசமே

சுத்தம் பண்ணப் படாத தேசமே
சுத்திகரிக்க உன்னைத் தருவாயோ?
ஸ்திரப்படாத தேசமே ..
நீதியின் வஸ்திரம் தரிப்பாயோ?

1.பெலனான வயதுள்ள வாலிபரே
தொலைநோக்க கண்களை ஏறெடுங்கள் (2)
எதிர் காலம் கனவாக மறைவதற்குள்
சுடராக இருளுக்குள் ஒளி கொடுங்கள் (2)

2.தேசத்தை ஆளும் பிரபுக்களே
தாழ்மையின் குரலுக்கு செவிகொடுங்கள் (2)
தேவைக்கு அதிகம் இருப்பதெல்லாம்
ஏழைக்கு தானம் செய்திடுங்கள் (2)

3.வேதத்தை சுமக்கும் சீடர்களே
வேண்டாத சுமைகளை விட்டுவிடுங்கள் (2)
பாவத்தை சுமக்கும் பாரதத்தில்
தூய்மைக்கு மாதிரி காட்டிடுங்கள் (2)
Save Page As PDF

Sunday, May 9, 2010

151. விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது - (2)
அக்கரை நோக்கி - (2)

1.பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச்சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ

2.ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலைவந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ

3.நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலைப் பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
ஏலோ - ஏலேலோ - (6) ஆ - ஆ

Save Page As PDF

150. வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே

வாலிபனே கன்னிகையே மயங்கி விடாதே!
வாலிபத்தில் சிருஷ்டிகரை மறந்து விடாதே!

1.நோவா கால மக்களெல்லாம் புறக்கணித்தாரே
புரண்டுவந்த வெள்ளத்தாலே அழிந்து விட்டாரே
சோதோமைப்போல் கொமோராவைப்போல் பாவம் செய்யாதே
சுட்டெரிக்கும் அக்கினியால் சாம்பலாகாதே

2.ஏவாளைப்போல் இச்சையிலே வீழ்ந்துவிடாதே
ஏமாற்றும் பிசாசுக்கு இடம் கொடுக்காதே
தீனாளைப் போல் ஊரை சுற்ற ஆசைப்படாதே
தீட்டுப் பட்டு அழிந்திடுவாய் மறந்துவிடாதே
3.சிம்சோனைப் போல் சிற்றின்பத்தில் சீரளியாதே
சிரித்து உன்னை மயக்கும் இந்த உலகை நம்பாதே
கடமையினை மறந்து விட்ட தாவீதை போல
கணப்பொழுதில் பாவத்திலே விழுந்துவிடாதே

4.பேதுருபோல் இயேசுவை நீ மறுதலிக்காதே
தோமாவைப் போல் அவிசுவாசம் அவர்மேல் கொள்ளாதே
கர்த்தரை நீ மறந்து விட்டு காலம் தள்ளாதே
புத்தியில்லா கண்ணிகைப்போல் கதவைத் தட்டாதே

5.வாலிபத்தில் சிருஷ்டிகரை நினைத்திடுவாயே
இல்லையென்றால் இரட்சிப்பின்றி அழிந்திடுவாயே
காலம் இது கடைசி காலம் உணர்ந்திடுவாயே
கர்த்தர் இயேசு வருமுன்னே திரும்பிடுவாயே

Save Page As PDF

149. வழி சொன்னவர் வழியுமானவர்

வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர் - இவரே

மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றோர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனவர் - இயேசு

1.இயேசுவே தெய்வம் - ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் - மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் - தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் - மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா - ராஜாதி ராஜா (2)

2.இயேசுவே இரட்சகர் - உயிர் தந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் - உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தனாம் - கர்த்தாதி கர்த்தனாம்
இயேசுவே ராஜனாம் - ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா - ராஜாதி ராஜா (2)
Save Page As PDF