Wednesday, March 31, 2010

128. நானும் என் வீட்டாருமோவென்றால்

நானும் என் வீட்டாருமோவென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - நீயும் சேவிப்பாயா?

1.கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால்
யாரை நீ சேவிப்பாய் யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்

2.அடிமையான நம்மையுமே
தேவாதி தேவன் மீட்டார்
மாபெரும் அடையாளங்கள் செய்திட்ட
கர்த்தரை சேவிப்பாயா?

3.நம் பாதையில் காப்பாற்றியே
கர்த்தர் நடத்தினாரே
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா?

4.நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய் ஜீவிப்பாயா?

Save Page As PDF

127. கிருபையிதே தேவ கிருபையிதே

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப் பாதையிலே - இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே - கிருபை

2.வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை - கிருபை

3.அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர - அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் - கிருபை

4.நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் - கிருபை

5.ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே - வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் - கிருபை

Save Page As PDF

126. வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே

1.வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே
தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
சுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே

வல்லமை தாரும் வரங்கள் தாரும்
தாகம் தீர்த்து அபிஷேகியும்

2.சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
கேள்விப்பட்ட யாவையும் சொல்பவரே
கீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமை
சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே

3.காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே

4.சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
வரங்களால் பெற்றிட அருள் தாருமே


Save Page As PDF

125. பூரண ஆசீர் பொழிந்திடுமே

1.பூரண ஆசீர் பொழிந்திடுமே
பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஜீவத்தண்ணீராலே தாகம் தீர்ப்பதாலே
தேவ நதி பாய்ந்தே செழித்தோங்குமே

வானம் திறந்துமே வல்ல ஆவியே
வந்திறங்கி வரமே தந்தருளுமே
அன்பின் அருள் மாரியே வாருமே
அன்பரின் நேசம் பொங்கிப் பாடவே

2.ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்னி பிரகாசம்
சொல்லரும் சந்தோசம் உள்ளம் ஊற்றுமே

3.தேவன்பின் வெள்ளம் புரண்டோடுதே
தாவி மூழ்கினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா

4.மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம்

5.குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே

6.மேகத்திலே நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே

Save Page As PDF

Tuesday, March 30, 2010

124. ஆயிரம் ஸ்தோத்திரமே இயேசுவே

ஆயிரம் ஸ்தோத்திரமே
இயேசுவே பாத்திரரே
பள்ளத் தாக்கிலே அவர் லீலி
சாரோனிலே ஓர் ரோஜா

1.வாலிப நாட்களிலே
என்னைப் படைத்தவரை நினைத்தேன்
ஏற்றிய தீபத்தால் இதயமே நிறைந்தது
இயேசுவின் அன்பினாலே

2.உலக மேன்மை யாவும்
நஷ்டமாய் எண்ணிடுவேன்
சிலுவை சுமப்பதே லாபமாய் நினைத்தே
சாத்தானை முறியடிப்பேன்

3.சிற்றின்ப கவர்ச்சிகளை
வெறுக்கும் ஓர் இதயம் தந்தீர்
துன்பத்தின் மிகுதியால் தோய்வுகள் வந்தாலும்
ஆவியில் மகிழ்ந்திடுவேன்

4.பலவித சோதனையை
சந்தோஷமாய் நினைப்பேன்
எண்ணங்கள் சிறையாக்கி இயேசுவுக்குக் கீழ்படுத்தி
விசுவாசத்தில் வளர்வேன்

5.இயேசுவின் நாமத்திலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
அல்லேலூயா ஸ்தோத்திரம் இயேசுவே வாரும்
என்றென்றும் உம்மில் வாழ

Save Page As PDF

123. எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க

எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்

1.சென்ற காலம் முழுவதும் காத்தார் ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுகபெலன் அளித்தாரே - அல்லேலூயா

2.சில வேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கித் திரும்பவும் என் மேல்
கிருபையும் பொழிந்தாரே - அல்லேலூயா

3.பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே - அல்லேலூயா

4.களிப்போடு விரைந்தெமைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் - அல்லேலூயா


Save Page As PDF

Monday, March 29, 2010

122. தேவா பிரசன்னம் தாருமே

தேவா பிரசன்னம் தாருமே
தேடி உம்பாதம் தொழுகிறோம்

இயேசுவே உம் திவ்ய நாமத்திலே
இன்பமுடன் கூடி வந்தோமே

1.வானம் உமது சிங்காசனம்
பூமி உமது பாதஸ்தலம்
பணிந்து குனிந்து தொழுகிறோம்
கனிந்தெம்மைக் கண் பாருமே - தேவா

2.சாரோனின் ரோஜா லீலிபுஷ்பம்
சாந்த சொரூபி என் இயேசுவே
ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
ஆண்டவரைத் தொழுகிறோம் - தேவா

3.கர்த்தர் செய்த உபகாரங்கள்
கணக்குரைத்து எண்ணலாகுமோ
இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகரைத் தொழுகிறோம் - தேவா

4.கர்த்தர் சமூகம் ஆனந்தமே
பக்தர் சபையில் பேரின்பமே
கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
சுத்தர்கள் போற்றும் தேவனே - தேவா

5.நூற்றிருபது பேர் நடுவே
தேற்றரவாளன் நீர் வந்தீரே
உன்னத ஆவியை ஊற்றிடுமே
மன்னவனே இந்நேரமே - தேவா

6.எப்போ வருவீர் என் இயேசுவே
ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
பறந்து விரைந்து தீவிரமே
இறங்கி வாரும் இயேசுவே - தேவா


Save Page As PDF