Tuesday, July 14, 2009

11. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை

1.ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

2.உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான்

3.பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே

4.என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான்

5.ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் - தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான்

6.நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான்

7.சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் Save Page As PDF

10. வனாந்திர யாத்திரையில்

வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே

1.செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் - வனாந்திர

2.தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே - வனாந்திர

3.இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே - வனாந்திர

Save Page As PDF

9. திருக்கரத்தால் தாங்கி என்னை

1.திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் நீர் வனைந்திடுமே

2.உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

3.ஆழ்கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்ம நண்பர் இயேசு உண்டே
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

4.அவர் நமக்காய் ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்ப கானான் தேசமதை


Save Page As PDF

Monday, July 13, 2009

8. மன்னன் இயேசு வருகின்றார்

மன்னன் இயேசு வருகின்றார் நீ மகிழ்ந்து பாடிடு
மணவாளன் வருகின்றார் நீ ஆயத்தபடு
அல்லேலூயா! ஆனந்தமே!
ஆடிப்பாடி நடனமாடி ஆனந்தித்திடு ( 2)


1.மகிமையானவர் மறுரூபமானவர்
கிச்சிலிப்பழம் அவர் கின்னரத்தோட்டம்
லீலிபுஷ்பமே சாரோனின் ரோஜாவே
மென்மையானவர் மகா மேன்மையுள்ளவர் - அல்லேலூயா

2.பொற்தளவீதி அது பொற்பரன் வீதி
பளிங்கு கற்களும் அங்கு பளிச்சிடுதே
இரத்தினங்களும் இளநீலமும்
படிகப்பச்சை மரகதமும் பாடிப்போற்றுதே - அல்லேலூயா

3.வெண்குதிரை மேல் உலாவ வருகிறார்
வெண் கிரீடமும் அவர் தலையில் ஜொலிக்குதே
வெண் சிங்காசனம் புன் சிரிக்குதே
நட்சத்திரங்கள் கைகொட்டிப் பாடுதே - அல்லேலூயா

Save Page As PDF

7. நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்

நேசரே உம்திரு பாதம் அமர்ந்தேன்
நிம்மதி நிம்மதியே
ஆர்வமுடனே பாடித்துதிப்பேன்
ஆனந்தம் ஆனந்தமே


அடைக்கலமே அதிசயமே
ஆராதனை ஆராதனை


1.உம் வல்ல செயல்கள்
நினைத்து நினைத்து
உள்ளமே பொங்குதையா
நல்லவரே நன்மை செய்பவரே
நன்றி நன்றி அய்யா

நல்லவரே வல்லவரே
ஆராதனை ஆராதனை

2.பலியான செம்மறி
பாவங்கள் எல்லாம்
சுமந்து தீர்த்தவரே
பரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோ
பாக்கியம் பாக்கியமே

பரிசுத்தரே படைத்தவரே
ஆராதனை ஆராதனை

3.எத்தனை இன்னல்கள்
என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேனையா
இரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்
நிச்சயம் நிச்சயமே

இரட்சகரே இயேசு நாதா
ஆராதனை ஆராதனை Save Page As PDF

6,இயேசுவைப்போல் அழகுள்ளோர்

இயேசுவைப்போல் அழகுள்ளோர் யாருமில்லை பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை

பூரண அழகுள்ளவரே! பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்


1.சம்பூரண அழகுடன் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுகீந்தேன் - பூரண

2.எருசலேம் குமாரிகள் எந்தனை வளைந்தோராய்
உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் - பூரண

3.நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் பாவ மோகமே
என்மேல் வந்து வேகமாக மோதியடித்தால் - பூரண

4.தினந்தோறும் உம்மிலுள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே - பூரண

Save Page As PDF

Friday, July 10, 2009

5.எப்படி பாடுவேன் நான்

எப்படி பாடுவேன் நான் - என்
இயேசு எனக்கு செய்ததை
ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்
ஆத்தும ஆதாயம் செய்வேன் - 2


1.ஒரு வழி அடையும்போது
புது வழி திறந்த தேவா
திறந்த வாசலை என் வாழ்க்கையில்
அடைக்காத ஆண்டவர் அல்லோ - 2


2.எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
அப்பனின் மார்பினில் சாய்ந்தென்றுமே
எப்போதும் பாடிடுவேன் - 2

3.கடந்து வந்த பாதையில்
கண்மணி போல் காத்திட்டீர்
கடுகளவும் குறை வைக்காமலே
அதிகமாய் ஆசீர்வதித்தீர் - 2 Save Page As PDF