Sunday, October 23, 2011

186. என் நேசர் வெள்ளைப் போள

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து
நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே - நான் (2)

அருமையானவர் எந்தன் நேசர்
இன்பமானவர் ஆத்ம நேசர்
மதுரமானவர் எந்தன் நேசர்
பிரியமானவர் மதுரமானவர் - என் நேசர்

1.காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி
மரம் போல் ஆனவர் இவர்
கன்மலைக் குன்றின் வெடிப்பிலே
ஓடிவரும் மானுக்கு சமானமாவார் - என் நேசர்

2.வெண்மையும் சிவப்புமானவர்
புறாவின் கண்கள் கொண்டவர் அவர்
கேதுரு மரம்போல் ஆனவர்
பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் - என் நேசர்
Save Page As PDF

Friday, June 10, 2011

185. என் உயிரான உயிரான

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உந்தன் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பானே
Save Page As PDF

184. கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையால் நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை - (7) - கிருபையால்

1. பெயர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை
கிருபை - (7) - கிருபையால்

2. நீதிமானாய் மாற்றியது உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது உங்க கிருபை
கிருபை - (7) - கிருபையால்

3. கட்டுகளை நீக்கினது உங்க கிருபை
காயங்களை கட்டியதும் உங்க கிருபை
கிருபை - (7) - கிருபையால்

4. வல்லமையை அளித்தது உங்க கிருபை
வரங்களை கொடுத்தது உங்க கிருபை
கிருபை - (7) - கிருபையால்

5. கிருபையை கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை கொண்டாடுகிறோம்
கிருபை - (7) - கிருபையால்


Save Page As PDF

183. தேவனே என் நண்பனே எனக்காய்

தேவனே என் நண்பனே
எனக்காய் மரித்தீரே (2)

சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன் (2)

1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என்நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் - தேவனே

2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் - தேவனே

3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அந்த இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும் - தேவனே

Save Page As PDF

182. யேஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேஹோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன் - (2)

யேஹோவா ஷாலோம்
யேஹோவா ஷம்மா
யேஹோவா ரூவா
யேஹோவா ரப்பா -(2)

1. எல்ரோயிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
என் தாகமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா - யேஹோவா

2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனா
என்னை என்றும் தாங்குவீங்க - யேஹோவா

3. லோஹினும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க - யேஹோவா




Save Page As PDF

Friday, May 27, 2011

181. கேரூபின் சேராபின்கள்

கேரூபின் சேராபின்கள்
ஓய்வின்றி உம்மைப் போற்றுதே (2)
பூலோக திருச்சபை எல்லாம்
ஓய்வின்றி உம்மை போற்றிட

நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
எங்கள் பரலோக ராஜாவே (2)
இந்த வானம் பூமியுள்ளோர் யாவும்
உந்தன் நாமம் உயர்த்தட்டுமே

1. பூமியனைத்திலும் உந்தன் மகிமை
நிறைந்து வழிகின்றதே
ஆலயத்திலும் உந்தன் மகிமை
அலையலையாய் அசைகின்றதே
துதி கன மகிமைக்குப் பாத்திரர்
எல்லாப் புகழும் உமக்குத் தானே

2. வானம் உமது சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நாங்கள் உங்கள் தேவ ஆலயம்
நீர் தாங்கும் தூயஸ்தலம்
சகலமும் படைத்த என் தேவா
நீர் நித்திய சிருஷ்டிகரே

3. பரலோகத்தில் உம்மை அல்லா
யாருண்டு தேவனே
பூலோகத்தில் உம்மைத் தவிர
வேறொரு விருப்பம் இல்லை
என்றும் உம்மோடு வாழ
எம்மை உமக்காய் தெரிந்தெடுத்தீர்

Save Page As PDF

180. பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் - (2)

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் - (2)


1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -( 2) துதிக்கிறோம்...........

2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
சர்வ சிருஷ்டிகரே - (2) துதிக்கிறோம்...........

3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் - (2) துதிக்கிறோம்...........
Save Page As PDF

Wednesday, January 5, 2011

179. எந்த நிலையில் நீ இருந்தாலும்

எந்த நிலையில் நீ இருந்தாலும் - உன்னை
வெறுக்காதவர் இயேசு ஒருவரே - என் தேவன் நடுவரே

1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் - எந்த

2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் - உன்
கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் - எந்த

3.ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் - உன்
ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள் - எந்த

4.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் - எந்த

5.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் - எந்த


Save Page As PDF

178. எங்கே ஓடுவேன்

எங்கே ஓடுவேன்
எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்

1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் - எங்கே ஓடுவேன்

2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ - எங்கே ஓடுவேன்

ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்


Save Page As PDF

177. உனக்கொருவர் இருக்கிறார்

உனக்கொருவர் இருக்கிறார்
உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் - 2

1. ஆகாதவன் என்று உன்னை யார்தள்ளினாலும்
ஆபிரகாமின் தேவன் உன்னை தள்ளிவிடுவாரோ
தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசர் அவர் - 2
அஞ்சிடாதே மகளே, மகனே என்று உன்னைத் தேற்றிடவே

2. வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
வேண்டாத வார்த்தைகளைச் சொல்லி புண்படுத்துவார்கள்
வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்
வாழத்தான் வேண்டுமென்று வியாதியிலே சுகம் தரவே

3. சாதிசனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர்
சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை
சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை

4. கஷ்டப்படும் போதும் நமக்கு உதவுவாரில்லை
கடன்பட்ட போது அதை தீர்ப்பவரில்லை
இஷ்டப்பட்ட தெய்வத்தையெல்லாம் கும்பிட்டும் பாத்தாச்சு
நம்ம கஷ்டங்களை தீர்க்க அவை முன் வரவில்லை

5. உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
சொல்வதெல்லாம் சும்மாங்க
இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
ஜனங்களின் பாவம் நீக்கி இரட்சிக்க வந்த தெய்வமுங்க

Save Page As PDF

Tuesday, September 7, 2010

176. சோர்ந்து போகாதே என் நண்பனே

1.சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
நீ கலங்காதே மனமே

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே - 2

2.என் ஆத்மநேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம் பிடித்து மகிமைதனில் அவர்
தினமும் நடத்துவார்

3.நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளிவிட்டாலும்
மனம் கலங்காதே திகையாதே உன்
இயேசு இருக்கிறார்

Save Page As PDF

Thursday, September 2, 2010

175. இது சிந்திக்கும் காலம்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாயிருக்காதே நீ மௌனமாயிருக்காதே

1.அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

2.இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

3.பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ எது
உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?



Save Page As PDF

174. யோசனையில் பெரியவரே ஆராதனை

யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை

ஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

1.கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை

2.சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை

3.வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை
ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை

4.தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை
தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை

5.பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை

Save Page As PDF

Wednesday, June 23, 2010

173. ஆதாரம் நீர்தானையா

ஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற; கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)

1.உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன (2) - என் நிலை மாற ... - ஆதாரம்

2.குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதிதான் கலைகின்றது (2) - என் நிலை மாற ... - ஆதாரம்

3.உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) - என் நிலை மாற ... - ஆதாரம்


Save Page As PDF

172. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென்னாத்துமாவிற்கே
ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்
ஜீவன் அழியாமை வெளியாக்கினால்

4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்

5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்

Save Page As PDF

171. படகோ படகு கடலிலே படகு

படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையே

1.வாலிபப்படகே உல்லாசப்படகே
தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே - படகோ

2.குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையே அழிக்கும் படகே
சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே - படகோ

Save Page As PDF

170. சின்னஞ் சிட்டுக் குருவியே

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு .......
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே - உன்னை
அழகாக படைச்சது யாரு

ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

சின்னஞ் சிட்டுக் குருவியே (2) - உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா

ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா - அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல...ல...ல...ல...ல...ல...


Save Page As PDF

Friday, June 18, 2010

169. அன்பரின் நேசம் ஆர் சொல்ல

அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் - அதிசய

1.இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே - அதிசய

2.பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே - அதிசய

3.வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? - அதிசய

4.செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே - அதிசய

5.பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே - அதிசய

Save Page As PDF

Monday, June 7, 2010

168. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

1.மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4.திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

Save Page As PDF

Friday, June 4, 2010

167. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்

1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பது தான் - (2)
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா .....(4)

2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்புகழ் பாடி மகிழ்வதுதான்
இரவும் பகலும் புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ் பாடி மகிழ்ந்திருப்பேன்

3.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான்
இரவும் பகலும் உம்மைத் தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத் தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத் தான் நான் நேசிப்பேன்

4.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான்
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்
Save Page As PDF